• October
    21
    Monday

Main Area

Main



தமிழிசையின் செல்போனை ஆட்டயப்போட்ட ஆண்டி இண்டியன்ஸ்!

Tamilisai
Tamilisai

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழிசையும் கலந்துகொண்டார். அப்போதைய கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் தமிழிசையின் செல்போனை திருடியுள்ளனர். சிறிது நேரம் கழித்துதான் தன்னுடைய செல்போனை காணவில்லை என்ற தகவலை தமிழிசை அறிந்தார். செல்போன் காணாமல் போனது குறித்து தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தாரா, இல்லையா என்பது பற்றி இன்னும்  தகவல் தெரியவில்லை. 

செல்போனில் கட்சி விஷயங்கள் குறித்த தகவல்கள் இருப்பதால் 
தமிழிசை மிகுந்த கலக்கத்திலுள்ளார்.  செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வீடியோ கிராபர்கள், போட்டோகிராபர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.