• November
    17
    Sunday

Main Area

Mainடிக் டாக் அடிக்‌ஷன்... கணவர் கண்டித்தால் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி...

தற்கொலை
தற்கொலை

இன்றைக்கு தமிழக தாய்க்குலங்களை வயது வித்தியாசமின்றி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பயங்கரமான நோய்க்குப் பெயர் டிக் டாக். தன் திறமைகளை எக்ஸ்போஸ் பண்ணத்துவங்கி லைக்குகள் அதிகம் விழாவிட்டால் மெல்ல தன்னையே கூட எக்ஸ்போஸ் பண்ணிக்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்தும் நிலையில், சதா டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த ஒரு பெண்ணைக் கணவர் கண்டித்ததால் அவர் எடுத்த விபரீத முடிவு?

tit tok

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா. இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர்.

குடும்பச் சூழல் காரணமாக பழனிவேலு சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா கணவர் ஊரான சீரா நத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தில் பொறுப்புடன் குடும்பம் நடத்தி வந்த அனிதாவின் வாழ்க்கையில் எமனாக டிக்-டாக் செயலி வந்தது. தனது செல்போனில் பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார். குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சாப்பாடு கூட தயார் செய்து கொடுக்காமல் டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாகக் காட்டுவது போன்றவற்றை டிக்டாக்கில் பதிவிட்டு அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.

husband and wife

அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாடிக்கொண்டிருந்த மகன் மோனிஷா கீழே விழுந்து காயமடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் போனிலேயே குறியாக இருந்துள்ளார் அனிதா. வினை இங்கேதான் ஆரம்பமாகிறது.தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாகத் திட்டியுள்ளார்.

lady

 இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதைத் தனது கடைசி விருப்பமாக டிக்டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்து வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்த அவர், பின்னர் தண்ணீரைக் குடிக்கிறார். ஒரு சில விநாடிகளில் அவரது கண்கள் மயக்க நிலையை எட்டுகிறது. இப்படிப் பட்ட வீடியோவை எடுத்து அவர் கணவருக்கே அனுப்புகிறார். இதற்கிடையே மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

எந்த குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாட்டில் அரும்பாடும்பட்டு பழனிவேலு வேலை பார்த்தாரோ, அதே குடும்பம் மனைவியின் பரிதாபமான முடிவால் நடுத்தெருவில் நிற்கிறது. இப்போது தந்தை ஊர் வந்து சேரும் வரை அவர்களது இரு குழந்தைகளும் அனாதைகள். இந்த செயலி இதுபோல் இன்னும் எத்தனை குடும்பத்தை செயலிழக்கச் செய்யப்போகிறதோ?

2018 TopTamilNews. All rights reserved.