• August
    24
    Saturday

Main Area

Tik Tok

தற்கொலை

டிக் டாக் அடிக்‌ஷன்... கணவர் கண்டித்தால் லைவ் வீடியோவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி...

இன்றைக்கு தமிழக தாய்க்குலங்களை வயது வித்தியாசமின்றி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பயங்கரமான நோய்க்குப் பெயர் டிக் டாக். தன் திறமைகளை எக்ஸ்போஸ் பண்ணத்துவங்கி லைக்குகள் அதிகம் விழாவ...


ராகவா லாரன்ஸ்

என்னை விட நீ தான் நல்ல நடிச்சிருக்க நண்பா! ரசிகரின் நடிப்பை பாராட்டிய லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை tik tok செய்திருந்த ரசிகரின் வீடியோவை லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


டிக்-டாக் வீடியோ எடுக்கும் போது செயின் பறிப்பு; திருடனை அடித்து கொன்ற கும்பல்!

புதுதில்லி: டிக்-டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுதில்லியின் நொய்டாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து டிக்-டாக்-கில் பதிவிட வீடியோ ஒன்று எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த திருடர்கள் பிரவீன் மற்றும் ரோஹித் ஆகியோர், அந்த இளைஞரிடம் இருந்து செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

tik tok

இதையடுத்து, அவர்களை பிடிக்கும் பொருட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் அவர்களை துரத்தி சென்ற இளைஞர்கள் சிலர், அப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். சினிமா படத்தில் வருவது போல நடந்த பைக் சேசிங்கின் போது, திருடர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை வைத்து தங்களை விரட்டி வந்தவர்களை சுட்டுள்ளனர்.

chain snatch

ஆனாலும், பொதுமக்கள் அவர்களை விடாது துரத்தியுள்ளனர். அப்போது, ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து திருடர்கள் சென்ற பைக்கை நோக்கி எறிந்துள்ளார். இதில், வண்டியின் பின்புறத்தில் அமர்ந்து சென்ற பிரவீன் என்ற திருடன் நிலை தடுமாறி கீழே விழ, பைக்கை ஓட்டிச் சென்ற ரோஹித் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். கீழே விழுந்த பிரவீனை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரவீனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரிடம் இருந்த திருடப்பட்ட தங்க செயினையும், துப்பாக்கியும் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், பிரவீன் மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிங்க

சிறையில் ரவுடியுடன் பெண் டாக்டர் கள்ளக் காதல்... திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்தவனின் லீலை..!

smprabu Thu, 04/25/2019 - 15:20
noida chain snatch Robbery Tik Tok thief கோப்புப்படம் க்ரைம்

English Title

Local residents chase chain snatchers, lynch one of the two accused

News Order

0

Ticker

0 
கோப்புப்படம்

டிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அதிரடி!

இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக...


உயர் நீதிமன்ற மதுரை கிளை

பிராங்க் ஷோ வீடியோ நிகழ்ச்சிகளுக்கு தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

டிக் டோக் செயலிக்கு 40 கோடி ரூபாய் அபராதம்: அதிர்ச்சியில் டிக் டோக் நிறுவனம்; காரணம் இது தான்?!

அமெரிக்கா: டிக் டோக்  செயலிக்கு  40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ள சம்பவத்தால் அந்நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டோக் . இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தை பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 

tik tok

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளின் ரகசியத் தகவல்களை அவர்களின் பெற்றோர்களின் அனுமதியின்றி பெற்றதாக டிக் டோக்  செயலி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம், டிக் டோக்  செயலிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

tik tok

இது குறித்து கூறியுள்ள டிக் டோக் செயலி, '13 வயதுக்குட்பட்டவர்களுக்காகப் பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் வசதியோடு புதிய செயலி உருவாக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக டிக் டோக்  செயலியைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் டிக் டோக்  செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

manikkodimohan Fri, 03/01/2019 - 14:57
Tik Tok tik tok video tik tok fined america tik tok ttn உலகம்

English Title

TikTok has been illegally collecting children’s data

News Order

0

Ticker

0 டிக் டோக் வீடியோவிலும் சாதி : நண்பனை கொலை செய்த இளைஞர்; திருத்தணியில் பரபரப்பு!

திருத்தணி: டிக் டோக்  வீடியோ காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் வெங்கட்ராமன். நண்பர்களான  விஜய்யும், வெங்கட்ராமனும் டிக் டோக் ஆப்பில் வீடியோ பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களை வெங்கட்ராமன் இழிவாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதை பார்த்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள், வெங்கட்ராமனை கண்டித்ததோடு வெங்கட்ராமனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெங்கட்ராமன், விஜய் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.

MURDER TTN

இதனை  தொடர்ந்து வெங்கட்ராமனின் தந்தையை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதை அறிந்து கொண்ட வெங்கட்ராமன் தனது வீடியோவை வெளியிட்ட நண்பன் விஜய் மீது ஆத்திரம் கொண்டுள்ளார். இதனால் மது அருந்தி கொண்டிருந்தபோது விஜய்யை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

அதன் பின்னர் விஜய் இறந்ததை உறுதி செய்த  வெங்கட்ராமன் திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

manikkodimohan Sat, 02/23/2019 - 11:19
Tik Tok tik tok video caste issue Murder crime venkatraman TTN க்ரைம் குற்றம் உள்ளூர்

English Title

teenager killed by a friend due to the tik tok video

News Order

0 
tiktok

தமிழகத்தில் #TikTok தடைக்கு நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என எம்எல்ஏ தமீமுன் அன்சாரி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்


tiktok

தொடரும் டிக் டோக் அவலம்: கைதான இரண்டு கல்லூரி மாணவர்கள்;காரணமான வீடியோ இது தான்?

கல்லூரி மாணவர்கள் இருவர், காவல்நிலையம் முன்பு  டிக் டோக்  ஆப்பின் மூலம் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியதால்  கைது செய்யப்பட்டனர்.


டிக் டோக் ஆப்-பில் பாலியல் தொழில்: கைதான புரோக்கர் பகீர் வாக்குமூலம்!

சென்னை: டிக் டோக்  போன்ற செயலிகளில்  பின்னணியில் பாலியல் தொழில் மறைந்து கிடப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஐ.டி.நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் சட்டவிரோதமாக மசாஜ் பார்லர் நடத்தி, அதன்மூலம் பாலியல் தொழிலை  நடத்தி வந்த  பூங்கா வெங்கடேசனை, விபச்சார தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

tiktok

இது குறித்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'பாலியல் தொழிலை விரிவுபடுத்த டிக் டோக் ஆப்பினை தேர்வு செய்தேன். இதில் சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப வாயசைத்து, பலர் வீடியோக்கள் பதிவு செய்கின்றனர். குறிப்பாக சிலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், அரைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக நடனமாடி பதிவு செய்கின்றனர். இதுபோன்ற வீடியோக்களில் அதிக லைக்ஸ் பெறுபவர்களைக் குறிவைத்து அவர்களிடம் Chat மூலம் நட்பாக பேசி பழகி, அவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் வலைக்குள் விழ வைக்கிறேன்.

tiktok

இன்னும் சில தரகர்கள், தங்களிடம் உள்ள பெண்களை ஆபாசமாக பாடவும், ஆடவும் செய்து, அதனை டிக்டாக் செயலியில் பதிவிட்டு, அதற்கு ஆபாசமாக கமெண்ட் போடும் நபர்களிடம் பேரம் பேசி பாலியல் தொழிலை நடத்தி வந்தேன்' என்று தெரிவித்துள்ளார்

இதனால் டிக் டோக், டப்ஸ்மேஷ் போன்ற செயலிகளில் வீடியோ பதிவிடுபவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தவிர்த்து, நாகரீகமான வீடியோக்களை பதிவு செய்யலாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

manikkodimohan Sun, 01/20/2019 - 12:17
Tik Tok tik tok videos tik tok sexual vidos poonga venkatesan prostitute tik tok தமிழகம்

English Title

tik tok app gave chance to prostitute

News Order

0 

கூகுள் ப்ளே ஸ்டோரின் ’சிறந்த ஆப்’- ’டிக் டோக்’!

2018ம் ஆண்டு முடியவுள்ள நிலையில், கூகுள் ப்ளே இந்த ஆண்டிற்கான சிறந்த ஆப்-பை அறிவித்துள்ளது. இந்தியாவின் ‘மிகவும் சுவாரஸ்யமான ஆப்’ என்ற பிரிவின் கீழ் ’டிக் டோக்’ ஆப்-பிற்கு கூகுள் ப்ளே விருது அறித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மியூசிக்கலி உடன் கூட்டணி வைத்து உலகளவில் பயணர்களை ஈர்த்தது டிக் டோக். இதன் மூலம், பயணர்கள் குறைந்த நொடிகளில் லிப்-சிங்குடன் கூடிய வீடியோவில், வித்தியாசமான முக பாவனைகளை காட்டி காமெடி, பாடல், நடனம் என நடித்து பதிவேற்றம் செய்யலாம். இந்த ஆப் பயணர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதையடுத்து, இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது.

tiktok

இந்தியா மட்டுமின்றி பிரேசில், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்-காங், ஜப்பான், இந்தோனேஷியா, கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும், ’மிகவும் சுவாரஸ்யமான ஆப்’ என்ற பிரிவில் ‘டிக் டோக்’ ஆப் விருதுகளை பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இந்த ஆண்டின் ‘சிறந்த ஆப்’ ஆகவும் ‘டிக் டோக்’ தேர்வாகியுள்ளது.

டிக் டோக் இப்போது 150 மார்க்கெட்களில் சுமார் 75 மொழிகளில் கிடைக்கிறது. உள்ளூர் கலச்சாரத்துடன் தொடர்புப்படுத்திக் கொண்டு, பயணர்கள் தங்களது மொழிகளில், தங்களுக்கு பிடித்த வீடியோக்களை தேர்வு செய்து நடிப்பதற்கு ஏற்ப இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் ப்ளேவின் பயன்பாட்டாளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் இந்த விருதுகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

amirthavarshini Tue, 12/11/2018 - 14:58
Google Play Store Tik Tok Best App Most Entertaining App Short-Video platform Musically tiktok தொழில்நுட்பம்

English Title

Tik Tok among Google Play’s best apps of the year கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்; டிக் டாக் விளையாட்டின் போது விபரீதம்-வீடியோ

சென்னை: டிக் டாக் விளையாட்டின் போது, பாடலுக்கு ஏற்ப நடித்த இளைஞர் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுது போக்காக உள்ளது.

அந்த வகையில், டிக் டாக் விளையாடிய இளைஞர் ஒருவர், பாடல் ஒன்றுக்கு ஏற்ப நடித்துள்ளார். கையில் கத்தியை வைத்துக் கொண்டு நடித்துள்ள அந்த இளைஞர், தனது நடன அசைவுகளின் போது, எதிர்பாரா விதமாக தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

டிக் டாக் விளையாட்டின் போது இளைஞருக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

smprabu Mon, 12/03/2018 - 10:39
Tik Tok knife cut tiktok தமிழகம்

English Title

Youngster Cut his neck during TIK TOK
2018 TopTamilNews. All rights reserved.