• April
    07
    Tuesday

Main Area

Main



நெருக்கமான போஸ்! அதர்வாவின் தள்ளிப்போகாதே படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் வெளியீடு

thalli-pogathey
thalli-pogathey

தள்ளிப் போகாதே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படத்தின் கதாநாயகன் அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பூமராங் பட இயக்குநர் கண்ணன் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தள்ளிப் போகாதே என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்குகிறார். பரியேறும் பெருமாள் எடிட்டர் ஆர்கே செல்வா இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தள்ளிப் போகாதே படத்தை தொடர்ந்து அதர்வா, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், ருக்மணி வண்டி வருது உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 
 

2018 TopTamilNews. All rights reserved.