• March
    31
    Tuesday

Main Area

Main



தளபதி 65க்கு நானும் ரெடி, விஜயும் ரெடி! பொது இடத்தில் அறிவித்த இயக்குநர் ஷங்கர்...

Shankar- vijay
Shankar- vijay

தளபதி 65 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், அதற்கு பொது நிகழ்ச்சியிலேயே இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்தன. மேலும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் உலாவந்தன. 

shankar- vijay

இந்நிலையில் இதுகுறித்து முதல்முறையாக விருது விழா ஒன்றில் வாய்திறந்துள்ள இயக்குநர் ஷங்கர், “தளபதி 65 படத்தை இயக்க நானும், நடிக்க விஜயும் ரெடி... எப்போது வேண்டுமானாலும் இது நடக்கலாம்” என தெரிவித்தார். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
 

2018 TopTamilNews. All rights reserved.