• February
    27
    Thursday

Main Area

Main



வெளியான 10 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம்! அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டு! 

தலைவி டீசர்
தலைவி டீசர்

தலைவி படத்தின் டீசர் இன்று காலை 10.30 மணியளவில் வெளியான நிலையில் தற்போது 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வரும் நிலையில் இயக்குநர் விஜய் தலைவி என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

தலைவி டீசர்

இந்நிலையில் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தலைவி படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது.  அதில் அரவிந்த்சாமி எம்ஜிஆராக தோன்றி 'நான் உங்கள்  வீட்டு  பிள்ளை' பாடலுக்கு அசத்தலாக நடனமாடுகிறார். இதை கண்ட பலரும் அரவிந்த்சாமியைப் பார்த்து பிரமித்ததுடன் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வெளியான 10 மணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.