நடிகர் அரவிந்த்சாமி எம்ஜிஆராக மாற இவர்தான் காரணம்...வைரல் போட்டோ!

தலைவி
தலைவி


இயக்குநர்  விஜய் இயக்கத்தில் தலைவி என்ற பெயரில் உருவாகும்  படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

 

தலைவி

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் தலைவி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

 அரவிந்த் சாமி

அதேபோல் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அரவிந்த் சாமி எம்ஜிஆர் கெட்டப்பில் உள்ள புகைப்படங்கள், டீசர் என வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் எம்ஜிஆராக மாறியுள்ள அரவிந்த் சாமியின் மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வலம் வருகிறது. அதில் அரவிந்த் சாமியுடன்  மேக் அப் கலைஞர் பட்டணம் ரஷீத்தும் உடன் உள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள்  நம்பவே முடியவில்லை அரவிந்த் சாமி எம்ஜிஆராகவே  மாறிவிட்டாரே! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.