• April
    07
    Tuesday

Main Area

Main



தலைவர் 168 படத்தின் பெயரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

Annaatthe
Annaatthe

தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரித்துவருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.இதனால் இணையத்தில் #Annaatha, #Thalaivar168  என்ற  ஹேஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

2018 TopTamilNews. All rights reserved.