• April
    03
    Friday

Main Area

Main



நேர்கொண்ட பார்வை: மலேசியாவில் கெத்து காட்டும் தல!

தல அஜித்
தல அஜித்

சென்னை: நேர்கொண்ட பார்வை படம் மலேசியாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தல அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இயக்கத்தில் வெளியான  இந்த படத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்துத் தெளிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதனின் அர்த்தம் நோ என்று அஜித் கூறிய வசனத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. 

nnp

இந்த நிலையில் இந்த படத்தை தமிழ் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் மலேசியாவில் இந்த படம்  பாக்ஸ் ஆஃபிஸில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையைத் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.