• October
    14
    Monday

Main Area

Main



தல அஜித்தை சூழ்ந்த ரசிகர்கள்; போலீஸ் தடியடி!

thalaajith
thalaajith

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித்தை காண அவரது ரசிகர்கள் சூழ்ந்ததையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர்.

சென்னை எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு, நடிகர் அஜித் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான ஆலோசகராக உள்ளார். விஸ்வாசம் படத்தின் பணிகளை முடித்துவிட்டு தக்ஷா குழுவுடன் இணைந்து ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் இயக்கும் முயற்சியில் தல அஜித் ஈடுபட்டிருந்தார். அது தொடர்பான கூடுதல் ஆராய்ச்சிக்காக அஜித் கடந்த வாரம் ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் தனது ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (நவ.30) நள்ளிரவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தல ரசிகர்கள் விமான நிலையத்தில் அவரை காண திரண்டனர். தல ரசிகர்கள் மட்டுமல்லாது, விமானத்திற்காக காத்திருந்தவர்கள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள், விமான நிலைய ஊழியர்கள் என ஏராளமானோர் திரண்டு அஜித்துடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முற்பட்டனர்.

thalaajith

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த, நடிகர் அஜித் மீண்டும் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். நீண்ட நேரம் ஆகியும் ரசிகர்கள் களைந்து செல்லாததையடுத்து, விமான நிலைய போலீசார் உரிய பாதுகாப்புடன் வேறு பாதையில் அஜித்தை அவரது காருக்கு அருகே கூட்டிச் சென்றனர்.

இதையும் தெரிந்துக் கொண்ட ரசிகர்கள் அந்த வழியிலும் வந்து அஜித்தை சூழ்ந்துக் கொண்டனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர். இதையடுத்து, பத்திரமாக அஜித் அவரது காருக்குள் ஏறிச் சென்றார்.

2018 TopTamilNews. All rights reserved.