• December
    15
    Sunday

Main Area

Main



பிக் பாஸுக்கு கிடைச்ச பெரிய அவமானம் இவங்க தான்; இந்தம்மா எவ்வளவு கேவலமா டிரெஸ் போடுது; பிரபல நடிகர் கடும் தாக்கு!

வனிதா விஜயகுமார் -  ஷெரின்
வனிதா விஜயகுமார் - ஷெரின்

சென்னை:  வனிதா விஜயகுமார் அம்மா,அப்பாவுக்கே அடங்காதவர் , எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் அடங்குவார் என்று முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் தாடி பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

balaji

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரம் ஆன நிலையில் வனிதா விஜயகுமாரின் போக்குமட்டும் இன்னும் சரியாகவில்லை. வனிதாவின் சத்தத்திற்குப் பயந்து போட்டியாளர்கள் அவருடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்து உலவிவருகிறது. 

vanitha

இந்நிலையில் வனிதா விஜயகுமார் பற்றி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் தாடி பாலாஜி கூறியுள்ளார். இதுகுறித்து பிரபல இணையதள ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அவர்,  'பிக் பாஸ் வீட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானம் வனிதா தான் . அவர் எதற்கெடுத்தாலும்  தாட் பூட்னு கத்துகிறார். அம்மா,அப்பாவுக்கே அடங்காதவர்  எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் அடங்குவார். நம்ம குணங்களை மாற்றிக்கொள்ளத் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறோம். அவர் அவரது குணத்தை மாற்றி கொண்டால் தான் உள்ளே இருப்பார். இல்லையென்றால் அவர் வெளியில் வருவது உறுதி' என்றார். 

sherin

அதே போல ஷெரின் குறித்து பேசும் போது, ஷெரின் ஒரு ஹீரோயின். அதனால் அவர் உள்ளேயும் அதே போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் உடுத்தும் ஆடைகள் மிகவும் கேவலமாக உள்ளது. மும்தாஜ் கூட ஹீரோயின் தான். ஆனால் அவர் உடுத்தும் உடைகள் மிகவும் நாகரீகமாக இருந்தது' என்று பிக் பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுத்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.