• February
    29
    Saturday

Main Area

Main



தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அலுவலருக்கு உதவும் முக்கிய நபர்களின் பட்டியல்

தயாரிப்பாளர் சங்க தற்காலிக குழு
தயாரிப்பாளர் சங்க தற்காலிக குழு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் அரசாங்கம் தலையிட்டு தனி அலுவலரை நியமித்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சனைகள் குறித்து தனி அலுவலருக்கு தெரியாது, அதனால் தற்காலிக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா

இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவரின் கடிதத்தில், அரசாணையின்படி சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் விரைந்து செயல்பட ஏதுவாக தனி அலுவலரின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் பொருட்டு தற்காலிக குழு ஒன்றினை அமைத்து அதன் விவரத்தை தெரிவிக்க கோரப்பட்டுள்ளது.

சினிமா

அதன்படி 9 நபர்கள் கொண்ட தற்காலிக குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் பாரதிராஜா, டி.ஜி. தியாகராஜன், ராஜன், சிவா, சிவசக்தி பாண்டியன், எஸ்.வி.சேகர், சதீஷ் குமார், துரைராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.