• July
    24
    Wednesday

Main Area

temple
சர்வ மங்களம் தரும் காஞ்சி காமாட்சி

கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி, தன் அருள்பார்வையும் அகிலமெங்கும் வீசிக் கொண்டிருக்கிறாள். சக்தி தலங்களில் அதி உன்னதமான தலம் காஞ்சிபுரத்தின் காமாட்சி ஆலயம் பார்க்கப்படுகிறது.

temple

‘கா’ என்றால் விருப்பம் எனப் பொருள். மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றி தருபவள். விருப்பப்பட்டு பக்தர்களை மனதை ஆட்சி செய்வதால், காமாட்சி என்று பெயர் ஏற்பட்டது. இந்த ஆலயத்தில், காமாட்சி ஸ்தூல வடிவமாகவும், சூட்சும வடிவமாகவும், காரண வடிவமாகவும் வீற்றிருந்து தமது கடாட்சத்தால் கோடி கோடியாக அருள்வதால் காம கோடி காமாட்சி எனும் பெயராலும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
முன்பொரு காலத்தில் பண்டாகாசுரன் எனும் அரக்கன் பிரம்மனிடம் பெற்ற வரத்தால் மூவுலங்களிலும் இருக்கும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு விதமான துன்பங்களையும், தொல்லைகளையும் கொடுத்து வந்தான். 

god

அரக்கனின் தொல்லைகள் தாங்காது, தேவர்களும், முனிவர்களும் ஒன்றுகூடி சிவபெருமானிடம் முறையிட்டார். அரக்கனை அழிக்கும் ஆற்றல் பராசக்தியிடமே உள்ளது என தேவர்களையும் முனிவர்களையும் கிளி வடிவில் காம கோட்டத்தில் தவம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் முறையிடச் சொன்னார் ஈசன்.
சின்னஞ்சிறிய சிறுமியாக காம கோட்டத்தில் சுற்றித் திரிந்த 9 வயது சிறுமியான காமாட்சி அசுரன் பண்டகாசுரனை வதம் செய்து ஆகாயத்தில் மறைந்தாள். அரக்கனை வதம் செய்தது யாரெனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லோரையும் பரவசப்படுத்தியப்படியே வானத்தில் அசரீரி எழுந்தது. 
‘காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களையும் தூண்களாகவும், நான்கு வேதங்களையும்  சுவர்களாகவும் எழுப்பி அதற்குள் சுமங்கலிப்பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவற்றை வைத்து கதவைத் தாழிட்டாள் என்னை வெளிப்படுத்துகிறேன்’ என்கிற அசரீரியைக் கேட்டு கூடியிருந்த முனிவர்களும், தேவர்களும் அவ்வாறே செய்தனர்.
அடுத்த நாள் அனைத்தும் தயாராகி, யாரென அறியும் ஆவலில் அனைவரும் காத்திருந்தனர். அம்பிகையின் ஸ்தோத்திரங்கள் முழங்க கதவு திறக்கப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் அங்கே அவர்கள் பார்த்த காட்சி அவர்களை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.

god

கோயிலின் கருவறையில் ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சதாசிவன் என ஐந்து பேரையும் ஆசனமாக்கி, அதன் மேல் பத்மாசன கோலத்தில் சின்னஞ் சிறு சிறுமியாய், எழில் வடிவாய், சாந்த சொரூபிணியாய், பக்தர்களை ரட்சிக்கும் லோக மாதாவாய் கைகளில் அங்குசம், பாசாங்குசத்தையும், கரும்பு வில்லையும், புஷ்ப பாணத்தையும் தனது நான்கு கரங்களில் ஏந்தி  நமக்கு ஏற்படுகிற உலக மாயையிலிருந்து விடுவிக்கிற பிரம்ம சக்தியாய் எழில் மிகு கோலத்தில் அன்னை காமாட்சி வீற்றிருந்தாள். ஆம்... காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி சுயம்புவாய் உருவானவள். சுயம்புவாக உருவானதால், தன்னை நோக்கி வரும் பக்தர்களின் சுயத்தை காக்கிறாள். 
நம்முடைய கஷ்டங்களையும், துக்கங்களையும், மன சஞ்சலங்களையும் நீக்கி ஆத்ம சுகத்தை அருள்பவள் காமாட்சி.  
கண் குளிர காமாட்சியைத் தரிசித்து விட்டு, அங்கே தரப்படுகிற குங்கும பிரசாதத்தை கொஞ்சம் தள்ளி, கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தருகிற திருவடிகளில் வைத்த பின்பு நெற்றியில் வைத்துக் கொண்டால் வாழ்வில் சர்வ மங்களங்களும் வசமாகும்.

ttnnewsdesk Sat, 07/20/2019 - 17:17
kanchi kamatchi temple Kancheepuram temple  காஞ்சி காமாட்சி ஆன்மிகம்

English Title

kanchi kamatchi will give us blessings

News Order

0

Ticker

0 ஆடி மாசத்துக்கு இத்தனை பெருமைகளா?

ஆடி மாசத்துல நல்ல விஷயம் எதுவுமே செய்யக் கூடாதென்கிற மூட நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. ஆடி மாதத்தில் நல்ல காரியங்கள் செய்ய கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை. வருஷத்தின் அனைத்து மாதங்களுமே வழிபாட்டிற்கு உரிய மாதங்கள் தான் என்றாலும், இந்த ஆடி மாதத்தை அம்மனின் மாதமாக கொண்டாடுகிறோம். 

god

ஆடி மாதம் தனி சிறப்பு பெற்ற மாதமாக இருப்பதால் தான் அம்மனுக்கு உகந்த மாதமாக மனசில் நிற்கிறது.

ஆடி மாதத்தை பீடை மாதம் என்றும் சிலர் அழைக்கின்றனர். அது அப்படியல்ல. உண்மையில் பீடு மாதம் அதாவது பீடு என்றால் பெருமை உடைய என்று அர்த்தம். அதனாலேயே அதை ஆன்மிக மாதமாக கொண்டாடுகிறோம்.  ஆடி மாதத்தில் தான் பருவநிலை மாறுதல் அடைந்து புதியதாக காற்றும், மழையும் ஆரம்பமாகிறது. காற்றில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும் மாதமும் ஆடி மாதம் தான். இதனால் தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விதைக்கும் பருவமாக கொண்டாடுகிறோம். ஆடியில் விதைத்தால், தை மாதத்தில்  அறுவடை செய்யலாம். தை மாதம் அறுவடை செய்து புது பொங்கல் பொங்குவதற்கான உழைப்பின் ஆரம்பம் தான் ஆடி மாதம். 

god

மேலும், பருவநிலை மாறுவதால் தொற்று நோய்கள், உடல் ஆரோக்கிய சீர்கேடு ஏற்பட வாய்ப்பு அதிகம். அம்மன் கோவில்கள் வேப்பிலையும், எலுமிச்சையும் வைத்து வழிபாடு செய்வர். வேம்பு, எலுமிச்சை இரண்டுமே கிருமி நாசினி. கூழ் வார்க்கும் வழக்கமும் ஆடிமாதத்தில் தான். செரிப்பதற்கு எளிய உணவு பொருளாகவும், குளிர் காற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் உணவாகவும் கூழ், நம் உடல் நலத்தை சீராக்குகிறது.
சிறப்புகள்

அதிர்ஷ்டம் இல்லாததாகவும், நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்புடையதாக இல்லாததாகவும் கருதப் படுகிற ஆடி மாதத்தில் தான் ஆண்டாள் அவதரித்தார். அவர் அவதரித்த பூரம் நட்சத்திரத்தைத் தான் ‘ஆடிப் பூரம்’ என்று கொண்டாடுகிறோம். விவசாயம் செழித்தோங்க காவிரி தாய்க்கு ஆடிப்பெருக்கு விழா எடுக்கிறோம். கருடாழ்வார் அவதரித்ததும் இப்படி பெருமைகள் வாய்ந்த ஒரு ஆடி மாதத்தின் பஞ்சமியில் தான். அதைத் தான் ‘கருட பஞ்சமி’ என்று கொண்டாடுகிறோம். சிவபெருமானின் இடது பாகத்தை விஷ்ணு ஏற்று சங்கர நாராயணராக காட்சியளித்த ஆடி தபசு இந்த மாதத்தில் தானே கொண்டாடப்படுகிறது. கஜேந்திர மோட்சம் கிடைத்த மாதமும் ஆடி மாதம் தான்.

god

உங்கள் குழந்தைகளின் கல்வி மேம்படுவதற்காக ஹயக்கிரீவருக்கு அர்ச்சனை செய்து,சுலோகம் சொல்லி வழிபடுகிறீர்களே... அந்த கல்வி கடவுளான ஹயக்கிரீவர் அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான். வியாச வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக ஆடி பௌர்ணமி இருக்கிறது. இறந்த நம் குடும்ப முன்னோர்களை வழிபடுவதற்கு சூரியன் திசைதிரும்பும் இந்த ஆடி மாதத்தின் அமாவாசை நாள் தான், 
உகந்த நாளாக இருக்கிறது. அடுத்த முறை யாராவது உங்களிடம் ஆடி மாசம் வேண்டாமே’ என்றால் மறக்காமல் இதன் பெருமையை எடுத்துச் சொல்லுங்கள்.

shoba Wed, 07/17/2019 - 16:27
aadi month lord amman temple ஆடி மாதம் ஆன்மிகம்

English Title

proud of aadi month

News Order

0

Ticker

0 ஒரு அத்திவரதரும் பல அவஸ்தைகளும்... பக்தரின் நேரடி ரிப்போர்ட்...

ஆன்மீகமோ அறிவியலோ ஏதோ ஒன்றில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு நடக்கிறதென்றால் எப்போதும் கவனம் ஈர்க்கப்படும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், சமூக வலைதளங்கள், மீடியாக்கள் அதை எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக கவனத்துக்கு உள்ளாக்குகின்றன. ஏதாவது ஒருவகையில் மக்களின் பார்வையை அதன் பக்கம் நோக்கி திருப்புகின்றன.

athivarathar

40 வருடங்களுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் நிகழ்வும் அப்படித்தான். அத்தி வரதர் யார், அதன் பின்னணி என்ன, அதன் வரலாறு, அதன் எதிர்காலம் எல்லாம் பலவாறாக ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டன அதன் பலனைத்தான் நேற்று காஞ்சிபுரமும், இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்தும் வந்து குவிந்த மக்களின் கூட்டமும் உணர்த்தின.

athivarathar

பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என்பது பலரும் அறிந்தது ஆகையால் அதிகாலையிலேயே சென்று சாமிதரிசனம் முடித்து வரலாம் என பலரும் நினைப்பதுண்டு ஆனால் நேற்று மட்டும் அதை எல்லோருமே நினைத்திருப்பார்கள் போல. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற இதிகாச நாவல்களில் வரும் ஊர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பயணித்து அதன் பொருட்டு கதையில் வரும் காட்சிகளை நினைவுகளில் பொறுத்திப்பார்ப்பதில் அலாதி பிரியமுண்டெனக்கு.

athivarathar

அப்படித்தான் இந்த வாய்ப்பையும், இந்த வார விடுமுறையையும் பயன்படுத்திக்கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்னால் முடிவெடுத்து நானும் நண்பரும் கிளம்பினோம். அதிகாலை 5மணிக்கு தயாராகி பெருங்களத்தூர் பேருந்து நிலையம் போனால் வரும் எல்லா காஞ்சிபுரம் பேருந்துகளிலும் படிகளில் நிரம்பி வழிந்தது கூட்டம். சரி இனி தாமதிக்க வேண்டாமென முடிவெடுத்து அடுத்து வந்த பேருந்தில் ஏறி நின்றுகொண்டே பயணித்து 7 மணிக்கு கோவிலை அடைந்தோம் காலை உணவை ஒரு தள்ளுவண்டியில் முடித்துவிட்டு, கிழக்கு கோபுரத்தின் வழியாக வரிசையில் நின்றோம். ஒரு வரலாற்று சிறப்புமிக்க கொடுமையான சம்பவம் எங்கள் வாழ்வில் நடக்கப்போகிறது என்பதையறியாமல்.

athivarathar

வரிசை என்றால் ஒருவர் இருவர் அல்ல 10க்கு மேற்பட்டவர்கள் பக்கவாட்டில் நிற்கும்படி அந்த வரிசையிருந்தது, 10 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 40 பேர் நிற்கிறோம். 8 மணிக்கு நின்ற வரிசை வெறும் 100 மீட்டரைக் கடந்திருந்த போது மணி 11 சூரியன் இன்று மட்டும் பகலிலேயே ஓவர் டைம் பார்ப்பது போல கொளுத்தி எடுக்கிறார். நல்ல உச்சி வெயில், ஒரு பந்தலில்லை, ஒரு ஃபேன் இல்லை, ஒதுங்க ஒரு நிழல் இல்லை, ஈரமான கைக்குட்டையில் வியர்வை துடைக்க முடியவில்லை, கூட்டத்தில் இருந்து வெளியேறவும் வழியில்லை, கழிப்பிட வசதிகள் இல்லை, குழந்தைகள் படும் அவஸ்தைகளை சொல்ல சொற்களும் இல்லை. மக்கள் எங்கிருந்து இப்படி வருகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒரு 300 மீட்டர் தொலைவு போய் U டர்ன் போட்டு திரும்ப அதே வழியில் வருவதற்கு 5 மணி நேரம். சனிக்கிழமை என்பதால் எல்லா மக்களும் குடும்பம் சகிதமாக வாடகை வண்டிகளில் நிரம்பி வந்து குவிந்து விட்டார்கள். அங்கங்கே குழந்தைகள் கதறுகின்றன, பெண்கள் மயங்கிச் சரிகிறார்கள், வயதானவர்கள் நிற்க முடியாமல் பரிதவிக்கிறார்கள். வயதுப்பெண்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஒருவழியாக 5 மணிநேரம் கழித்து கோபுரத்திற்கு முன்னால் உள்ள பந்தலை அடைந்தபோது யாரோ சிலர் கொடுத்த பிஸ்கட், வாட்டர் பாட்டில்களை காவல்துறை வினியோகித்துக் கொண்டிருந்தனர். கோபுரத்தின் நுழைவு வாயிலுக்கும் பந்தல் தொடங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளி 200 மீட்டர் இருக்கும் அதை கடக்கவே 2 மணி நேரமானது. ஜிக் ஜாக் போல 200க்கு மேற்பட்ட தடுப்புகள்.

athivarathar

கோபுர நுழைவு வாயிலை அடைந்ததும் இனி வேகமாக சென்றுவிடும் என நினைத்த போது அடுத்த வரிசைகள் அழுங்காமல் தள்ளி விட்டார்கள் அதைக்கடக்க மேலும் 2 மணிநேரங்கள், அதிலிருந்து கோவிலின் பிரதான சுற்றுவட்டத்தை தொட்ட போது அங்கே திருப்பிப்போட்ட "L" போல ஒரு பெரிய வரிசை அதைக்கடக்க 2 மணி நேரம், இறுதியாக படாத பாடு பட்டு படுத்தநிலையில் இருந்த அத்தி வரதரை 2 நொடிகள் மட்டுமே பார்க்க முடிந்தது. காலை 8 மணிக்கு வரிசையில் நின்று இரவு 7 மணிக்கு அத்தி வரதரை பார்த்தோம். இடையில் உணவு இல்லை, கழிவறை செல்லவில்லை, 10நிமிடம் உட்காரவில்லை, எங்கேயும் இடையில் நுழையவில்லை, சாமி பார்த்ததும் ஒரு விபூதி, குங்குமம் இல்லை, பல இன்னல்களைச் சுமந்து இந்தநாள் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நாளாய் மாறிப்போனது. எனக்கு மட்டுமல்ல நேற்று வந்திருந்தவர்களில் கிட்டத்தட்ட 14, 15 மணி நேரங்கள் வரிசையில் நின்று சாமி பார்த்தவர்களும் உண்டு. அவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகள் வரும் காலம் வரை மறக்கவே முடியாத அவஸ்தையாக இது நிச்சயம் இருக்கும்.

athivarathar

என் அருகில் இருந்த 60வயது மதிக்கத்தக்க அம்மாவிடம் "நீங்கள் கடந்தமுறை இதை பார்க்கவில்லையா?" எனக்கேட்ட போது "இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே இப்போதாப்பா வெளிய தெரியுதுனு சொன்னாங்க". இப்போது போல 1979ல் இத்தனை வசதிகள் இல்லை, சமூக வலைதளங்கள், ஊடகங்கள், வைரலாக பரவும் விபரங்கள், குறிப்பாக மக்கள் தொகை இவ்வளவு இல்லை. இதுதான் அரசாங்கமும், அறநிலையத்துறையும், காவல்துறையும் சரியான நடவடிக்கைகள், தேவைகளை முன்னெடுக்கதவறிய காரணங்களும் கூட. விடுமுறை நாளில் மக்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும், எந்தெந்த வழியாக வருவார்கள், என்னென்ன வசதிகள் செய்யவேண்டும், எந்த வழிகளில் அவர்களை அனுப்ப வேண்டும் என பல விஷயங்களில் குளறுபடி செய்திருக்கிறார்கள். இத்தனை கூட்டத்தையும் சமாளிக்க, விரைவாக அனுப்ப, வேண்டிய அத்தியாவசிய உதவிகளை செய்ய பண வசதியும், ஆள் வசதியும் இருக்கிறது ஆனால் சரியான திட்டமிடல் இல்லை. ஜீலை1ல் வைத்தார்கள் அத்தி வரதரை 13 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் பல விஷயங்களை செய்யாமலே கோட்டை விட்டிருக்கிறார்கள் அதுவே மக்கள் அவதிப்பட முக்கிய காரணம். 2500 போலீஸ் போடப்பட்டிருப்பதாய் சொல்கிறார்கள் ஆனால் அத்தனை பேர் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை, விடுமுறை நாட்களிலாவது சிறப்பு பேருந்துகள் விடலாம் அதுவும் இல்லை. "திருப்பதியில் இல்லாத கூட்டமா இங்கு வந்துவிடப்போகிறது?" என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, திருப்பதியில் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் வந்தாலும் காற்றோட்டமான அறைகள், குளிர்பானங்கள், பால், தண்ணீர், உணவு, கழிப்பிட வசதி என எல்லாமே கிடைத்துக்கொண்டே இருக்கும். இங்கு 1 லட்சம் பேரை சமாளிக்க முடியாமல் திணருகிறார்கள். 
தங்களுக்கு வேண்டியவர்களை அலுங்காமல் குழுங்காமல் போய் பார்த்து வர என்னவேண்டுமானாலும் செய்கிறார்கள் பொது மக்களை அப்படி மதிப்பதில்லை. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ஓட்டு போட்ட தப்பை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது அதைபேசி ஒருபயனும் இல்லை.

athivarathar

அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்றாலும் இந்த கூட்டத்தில் இருந்து எடுத்துக்கொள்ள எனக்கு அத்தனை விஷயங்கள் கிடைத்தன. கொதிக்கும் வெயிலில் அழும் பையனை பொறுமையிழந்த ஒரு அப்பன் பளீர் பளீரென அடிக்கிறார், கூட்டத்தில் தொலைந்த தன் மகனை இன்னொரு தாய் தேடியபடி அலைகிறார், நான்கு மாத குழந்தையை ஒரு கையிலும் மனைவியை மறுகையிலும் பிடித்து வந்த கணவன் வெயில் தாங்காமல் வெறுத்து சிரமப்பட்டு வெளியேறுகிறார், வரும் எல்லோருக்கும் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கிறார் ஒரு உள்ளூர்வாசி. மயங்கிசரிந்த தன் 60 வயது மனைவியை ஓரமாக உட்காரவைத்து 70 வயது கணவன் ஒரு அட்டையை விசிறியாக்கி வீசிக்கொண்டிருக்கிறார், நான் பார்க்கும் போதே அதே இடத்தில் மயங்கிய ஒரு 30 வயது பெண்ணுக்கும் சேர்த்து விசிறி விடுகிறார். தூங்கி விழும் தன் குழந்தைகளை தாங்கிப்பிடித்தபடி பலர் விழித்திருக்கிறார்கள், காணாமல் போன உறவுகளை மைக் செட் வழியே அழைத்துக்கொண்டிருக்கிறார்கள், கோவிலுக்கு உள்ளே ஆண்கள் மதில் சுவரையொட்டியும், குழந்தைகளும் பெண்களும் மரம், செடிகளுக்கு பின்னே சிறுநீர் கழிக்க ஒதுங்கியதும் மனதை என்னவோ செய்தது, சாமிக்கு மிக அருகில் வந்து சண்டையிட்டுக்கொள்கிறார்கள் பெண்கள்.

athivarathar

ஒரு கட்டத்தில் வெளியே U டர்ன் போடுமிடத்தில் பொறுமையும், சக்தியும் இழந்து, வெளியேறி விடலாமா என நினைக்கையில் தன் அப்பாவின் தோழ்களில் அமர்ந்தபடி சுற்றி இருக்கும் மனிதக்கூட்டத்தை பார்த்து எதையோ நினைத்து அழகாய் அப்படி ஒரு சிரிப்பு சிரித்த ஒரு குழந்தையின் சிரிப்பில் இருந்து கொஞ்சம் எடுத்து எனக்குள் ஊற்றிக்கொண்டு முன்னேறிப்போனேன். சோர்வு வரும் இடங்களில் எல்லாம் சுற்றியிருக்கும் குழந்தைகளின் முகத்தில் வழியும் மொழிகளையும், வலிகளையும் எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருந்தோம்.

வாழ்க்கையும் அப்படித்தான் சோர்வுறும் சமயங்களில் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள் ஏதாவது ஒருவகையில் தானாக நகரத்தொடங்கலாம். தொடர்ந்து நகர்தல் தானே வாழ்க்கை.

---தனபால் பவானி
14.07.2019

ttnnewsdesk Wed, 07/17/2019 - 15:24
athivardar issues for people temple அத்திவரதர் தமிழகம்

English Title

one athivardar so many issues

News Order

0

Ticker

0 21 தலைமுறை பாவங்களைத் தீர்க்கும் திருவெண்காடு! 

உலகம் முழுவதும் நிறைய சிவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் ஏன் திருவெண்காடு மட்டும் தலைமுறைக்கான பாவங்களைத் தீர்ப்பதில் தனித்துவம் பெறுகிறது? திருவெண்காட்டில் மட்டும் தான் ருத்ரபாதம் இருக்கின்றது. இந்த ருத்ரபாதத்தை வழிபட்டால் நமது 21 தலைமுறைக்கான பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.  இதே போல் காசியில் இருக்கும் விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறைக்கான பாவங்கள் மட்டும் தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில், யார் முறைப்படி  ருத்ர பாதத்தை வழிபட்டாலும் அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைத்து, அவர்களுடைய 21 தலைமுறைக்கான பாவங்களும் விலகி விடும். 

thirvarkadu

இவை தவிர, இன்னும் பல சிறப்புகள் திருவெண்காடு ஆலயத்திற்கு உள்ளது. 
இந்த ஆலயத்தில் வழிபட்ட பிரம்மனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள். பிரம்மனுக்கு வித்தையை உபதேசித்ததால், இத்தலத்தின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. இந்த தலத்தில் தேவேந்திரன், ஐராவதம்  என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி , ச்வேதகேது ஆகியோர் பூஜித்துள்ளனர்.  யமன் பாசக் கயிற்றை வீசிய போது சிவன் வெளிபட்டு அருள் பாலித்த மார்கண்டேயனின் வரலாறு தெரியும் தானே... அந்த உத்தாலக முனிவரின்  எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின்  உயிரைக் காப்பாற்றிய தலம் இது தான். 
இந்த தலத்தின் வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது.  திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம்  செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய வரதமாகக் அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை. ஒவ்வொருவருடைய வாழ்விலும் 17 ஆண்டுகள் புதன் திசை நிகழும். இந்த திருவெண்காட்டு தலத்தில் வீற்றிருக்கும் புதன் சன்னிதியில் 17 தீபங்களை ஏற்றி வைத்து வணங்கி, 17 சுற்றுகள் வலம் வந்து வழிபட்டால் புதன் நல்லதைச் செய்வார். ஆணும், பெண்ணும் அல்லாத அலி கிரகமான புதன் இந்த தலத்தில் ஆண் கிரகமாக கம்பீரமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால், கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.  

god

குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த தலத்திற்கு வந்து, தலத்தில் இருக்கும் மூன்று குளங்களிலும் நீராடி, அருகிலிருக்கும் பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
பில்லி சூனியம், திருஷ்டிகள், நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக வழக்கு நிலுவை போன்றவற்றின் பாதிப்பு இருப்பவர்கள் இந்த தலத்தில் ஹோமங்கள் செய்தால் பிரச்சனைகள் விலகுகின்றன. அசுரனை எதிர்த்து போரிட சென்ற நந்தியை அசுரன் 9 இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு சொல்கிறது. அப்படி குத்துப்பட்ட நந்தியை இன்றும் சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தியின் உடம்பில் 9 இடங்களில் ஈட்டியால் குத்துப்பட்ட துளைகள் இன்றும் காணப்படுகின்றன. இந்த நந்திக்கு தான் பிரதோஷ வழிபாடுகள் இன்று வரையில் நடத்தப்படுகின்றன. அதனால் பிரதோஷ காலங்களில் தரிசிப்பது இன்னும் விசேஷம்.  
புதன் பரிகார ஸ்தலம் என்கிற அளவில் மட்டுமே கேள்விபட்டு திருவெண்காடு வருபவர்கள், அவசர அவசரமாக ஒரே நாளில் நவக்கிரக கோயில்களையும் பார்த்து விடுகிற ஆவலில் நேராக புதன் சன்னதிக்குச் சென்று வழிபட்டு, அவசர அவசரமாக அடுத்த கோயிலை நோக்கி ஓடுகிறார்கள். கால காலமாக நாம் செய்த பாவங்களை எல்லாம் ஒரே நாளில் கரைத்து விட்டு, அவசர கதியில்  முன்னேற நினைக்கும் பேராசை தானே இது? இந்த எண்ணத்துடன் ஆலய தரிசனத்தை மேற்கொள்ளாமல்,

thirvarkadu

இந்த தலத்திற்கு சென்றதும் முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ளுங்கள். இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும். இத்தலத்தில் காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் இருக்கும். ஆனால் உண்மையில் அவள் சாந்தசொரூபிணி. அத்தனை சாந்தமாக பக்தர்களை ரட்சிப்பவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள். அந்த காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.

ttnnewsdesk Tue, 07/09/2019 - 15:13
thiruvaikadu temple  திருவெண்காடு ஆன்மிகம்

English Title

thirivirkadu will save your 21 generation from sin

News Order

0

Ticker

0 பித்ரு தோஷம் நீக்குவதில் காசிக்கு இணையான தமிழக கோவில் 

கர்ம வினைகளைப் போக்க எல்லோரும் காசிக்கு செல்வார்கள். ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இணையான... ஏன் இன்னும் சொல்லப் போனால் காசியை விட மேலான கோயில் ஒன்று நம் தமிழகத்தில் உள்ளது.  கங்கை கரையினில் காசி இருப்பதைப் போல சங்கராபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது இந்த கோயில். 

temple

செஞ்சியில் தோன்றி விழுப்புரம் வழியாக தவழ்ந்து புதுச்சேரிக்கு அருகில் கடலில் கலக்கும் சங்கராபரணியை ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். அந்த ‘வராக நதி’க்கரையின் ஓரத்தில் தான் அமைந்திருக்கிறது 
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரில் சிவனுக்கு உகந்த வேதம் என்கிற ஊரினையுடைய வேதபுரியில் இருக்கிறது திருக்காஞ்சி. காசிக்கு நிகரான ஊர் இது. இந்த திருக்காஞ்சியில் வீற்றிருக்கும் வராக நந்தீஸ்வரர் ஆலயம் தான் பித்ரு தோஷங்களை நீக்குவதில் காசியை விட பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த இறைவனை ஸ்ரீ கங்கை வராக நந்தீஸ்வரர் என்று கங்கையையும் அடைமொழியாக சேர்த்தே அழைக்கிறோம். 

nandhiswar

திருக்காஞ்சியின் வடக்கு திசையில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியில் குளித்து விட்டு இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிப்பட்டால் முன்னோர்களின் சாபங்கள் நீங்குவதுடன், செல்வ வளங்களும் பெருகும் என்பது ஐதீகம்.  இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும்  ஷோடச லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். பதினாறு பட்டைகள் கொண்ட இந்த சோடச லிங்கம்  அகத்திய முனிவரால் ஆவாகனம் செய்யப்பட்டது. ஏறத்தாழ 3000 வருடங்களுக்கும் மேல் பழைமையான ஆலயம் இது. சிவன் மேற்கு திசை நோக்கி சில ஆலயங்களில் தான் அமர்ந்திருக்கிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர், ஆந்திராவில் இருக்கும் காலஹஸ்தி,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் திருகாஞ்சியில் மட்டும் தான். 
ராகுவும், கேதுவும் வழிபட்ட தலம் என்பது கூடுதல் சிறப்பு. அதனால் ராகு மற்றும் கேது தோஷம் நீங்கவும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். 

 

ash

முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் சேர்ப்பதற்காக போகும் வழியில் திருகாஞ்சி என்ற இந்த ஊர் எல்லைக்கு வரும் போது அதில் உள்ள அஸ்தி பூவாக மாறியிருந்தது. மெய்சிலிர்த்து இறைவனை வேண்ட, கவலை வேண்டாம்..காசியை விட அதி சக்தி வாய்த இடம் இது’ என்று அசரீரி ஒலித்தது. அன்றிலிருந்து பக்தர்கள் காசியில் செய்யும் பித்ரு காரியங்களை இந்த ஊரில் செய்ய ஆரம்பித்தனர்.
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கிறது.

ttnnewsdesk Tue, 07/09/2019 - 14:43
nandhiswar temple நந்தீஸ்வரர் ஆன்மிகம்

English Title

The Temple in tamilandu is the equivalent of Kasi in the removal of Pitru Dosham

News Order

0

Ticker

0 கோவில்களில் தேங்காய் உடைத்து ஏன்வழிப்படுகிறோம்?

கோவில்களில் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரையிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக மட்டுமே தேங்காய் உடைப்பதை தொன்றுதொட்டு செய்து வருவதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அது கிடையாது. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

coconut

தேங்காயின் மேல் பகுதியில் வலிமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்பு போன்ற பகுதியும், அதைத் தொடர்ந்து தேங்காயின் உட்புறம் நீரும்  உள்ளது. இதில் உருண்டையான புறஓடு என்பது பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது. இரண்டுமே கோள வடிவம் கொண்டவை ஆகும். எனவே இது  உலக மாயையை குறிக்கிறது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. பரமாத்மாவால் விளையும் பரமானந்த  அமிர்தத்தை இளநீர்  பிரதிபலிக்கிறது. 
 அதாவது மாயை காரணமாக பரமாத்மாவை உணராமல், பரமானந்த பிராப்தியையும் பெறாமல் ஜீவாத்மா நிற்கின்றது. அதேபோல வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கிறது. ஈஸ்வர சந்நிதியில் மாயையை அகற்றி, தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர்  அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது உணர்த்துகிறது. இவ்வாறான உட்கருத்துகள் பல இருப்பதால்தான்.இறை வழிபாட்டில் தேங்காயை முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இதனால் தான் இறைவழிபாட்டில், மறக்காமல் தேங்காய் உடைத்து வழிபடுகிறோம்.

newsdesk Fri, 06/21/2019 - 19:16
temple coconut  தேங்காய் ஆன்மிகம்

English Title

why we are breaking coconut in temple

News Order

0

Ticker

0 என்ன வேண்டுதலுக்கு எத்தனை முறை ஆலய பிராகாரத்தை வலம் வர வேண்டும்?

ஆலயங்களுக்குச் செல்லும் போது, கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர், பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கமானது தான். ஆனால், எல்லோரும் ஒரு முறை தானே சுற்றி வருகிறார்கள். அதானல் நாமும் ஒரு முறை வலம் வந்தால் போதும் என்று நினைத்து சுற்றி வருதல் கூடாது. ஆலயங்களில், பிராகாரத்தை எத்தனை முறை சுற்றி வந்தால் என்ன மாதிரியான பலன்கள் என்கிற  முழு விவரங்களையும் நாம் சரியாகத் தெரிந்துக் கொண்டு சுற்றி வருவது முக்கியம்.  

temple

டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக கோயில் பிராகாரத்தை சுற்றி வருவதன் பலன்களைப் பார்க்கலாம். 
பொதுவாக ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும். சிலர் ஸ்பெஷல் தரிசனம் என்கிறப் பெயரில் குறுக்கு வழியில் இறைவனை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக பாதி தூரம் மட்டும் வந்து, கோயிலை விட்டு வெளியேறி வருவார்கள். இதெல்லாம் தவறு.
ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும்.

temple

ஒன்பது முறை வலம் வருவதால் சத்ரு நாசம், எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். 
பதினொரு முறை சுற்றி வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் கைகூடும். 
பதினைந்து முறை வலம் வந்தால் தனப்ராப்தி உண்டாகும்.
பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். 
பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.
இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.
நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
யாருக்கு என்ன தேவையோ அவர்கள் தான் வலம் வர வேண்டும். பிள்ளைகளுக்காக தாய் செய்கிற பிரார்த்தனைகள் பலிக்கும்.

newsdesk Tue, 06/18/2019 - 11:49
temple god prayer கடவுள் ஆன்மிகம்

English Title

what should we must pray to god how many round we have to do in temple

News Order

0

Ticker

0 ஆலயங்களில் இறைவனை வழிபடும் முறைகள்.. இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா?

ஆன்மிகத்திற்கு பல்வேறு முகங்கள் உண்டு.ஒரே ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் இருப்பதைப் போல, இறைவனையும் பல்வேறு வகையில் வழிபடுகிறோம். அதில் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒன்று.

god

டாப் தமிழ் நியூஸில், இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பேர் தினந்தோறும், சோம்பல் இன்றி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள்? இன்று நகரை அழகுப்படுத்த ஆங்காங்கே உருவாகி வரும் பூங்காங்களில், சில இடங்களில் மட்டும் நடைப்பயிற்சிக்கென கூழாங்கற்களை பதித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. கோயில் பிரகாரத்தை வலம் வருவதும் நடைப்பயிற்சி தானே.. அதுவும் வெறும் கால்களில் நடந்தால், அதன் பலனைச் சொல்லவும் வேண்டுமா?

worship

ஆலயங்களில், இறைவனை வழிப்படும் முறைகளை பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்பொழுதாவது நாம் கவனித்திருக்கிறோமா?
ஆலயங்களுக்கு, இறைவனை வழிப்படச் செல்லும் போது வெறும் நெற்றியோடு செல்லக் கூடாது. கண்டிப்பாக குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தனம் தரித்துதான் செல்ல  வேண்டும்.
ஆலயத்தில் இருக்கும் கொடி மரத்தை எக்காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது. கொடிமரத்துக்கு பின்னால், கீழே விழுந்து தான் வணங்க வேண்டும். 

worship

கடவுளைத் தரிசிக்கும் போது, நம் பார்வை முதலில் பாதத்தைத் தான் தரிசனம் செய்ய வேண்டும். பாத தரிசனத்தை மனதில் நிறுத்தியபின் தான் முகத்தை தரிசனம்  செய்ய வேண்டும்.
பூ, சந்தனம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படி நாம் வாங்குகிற விபூதி, குங்குமம் போன்றவை, நம் கையை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரசாதங்களை வலது கையில் தான் வாங்க வேண்டும். அப்படி வலது கையால் வாங்குகிற பிரசாதங்களை இடது கைக்கு மாற்றி, வலது கையால் பயன்படுத்தலாம். 
நீங்கள் கடவுளை வணங்கும் பொழுது, உள்ளே எண்ணெய்யால் ஏற்றப்பட்ட ஒரு விளக்காவது எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே விளக்கு எரியாமல் இருக்கும் பொழுது வணங்கக் கூடாது.

worship

அபிஷேகம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதோ, அலங்காரத்திற்காக திரை போடப்பட்டிருக்கும் பொழுதோ, நமக்கு அவசரம் என்று ஆலயத்தைச் சுற்றி வரக் கூடாது. 
ஆலயங்களில், கொடிமரத்தின் கீழ் மட்டும் தான் விழுந்து வணங்குதல் வேண்டும்.
இதையெல்லாம் அடுத்த முறை ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

admin Thu, 06/13/2019 - 14:54
god worship temple கடவுள் ஆன்மிகம்

English Title

how to worship god these are the steps to be followed..

News Order

0

Ticker

0 
கோவில் மணி

கோவிலுக்குச் செல்லும் போதும், இறைவனை வழிபடும் போதும் ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்?

பல ஆன்மிக செயல்களுக்கு காரண காரியங்கள் தெரியாமலேயே, நமது முன்னோர்கள் வழிவழியாகச் செய்து வந்தார்கள், நாமும் அதைப் பின்பற்றுகிறோம் என்று நடைமுறையில் செய்து வருகிறோம். 

ஆலயங்களில் தரும் பிரசாதங்களை வாங்கினால் பாவம் சேருமா?

நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போது,நிறைய பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் ‘பால் சர்க்கரைப் பொங்கல்’ என்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதைப் பார்த்திருப்போம்.சிலர் தங்களது வேண்டுதலுக்கு செவி சாய்த்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அவர்களது சந்தோஷத்தை கோயிலுக்கு வரும் பக்தர்களுடன் இப்படி பகிர்ந்துக் கொள்கிறார்கள். 

prasatham

இந்து மதம் ஆன்மிகத்தோடு பொதுநலனையும் இப்படி ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும் இணைத்தே கடவுளைக் கொண்டாடி வந்திருக்கிறது.பிரசாதம் என்பதை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பொருளாகத் தான் பார்க்க வேண்டும். நம் வீட்டிலிருந்து உணவுப் பொருட்களை சமைத்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அப்படியே நாம் பிரசாதமாகத் தருவதில்லை. 

அம்மன் கோயில்களில் பார்த்திருக்கலாம்... அம்மனுக்கு பொங்கலிட்டு, படைத்து,அதன் பின் தான் பிரசாதமாகத் தருகிறோம்.கடவுளுக்கு நைவேத்தியம் செய்து தரும் போது,அந்த உணவுப் பொருள்  தூய்மையான பிரசாதமாக மாறிவிடுகிறது.அப்படியான பிரசாதங்களை வாங்கும் பொழுது அது பாவமாக கருதப்படாது.

prasatham

ஆனால், பிரசாதத்தை வாங்கும் முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வோர் விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும்,பெருமாள் கோவில்களில்  துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள்.தீர்த்தம் வாங்கும் போதும் வரிசையில் நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும். ஒருவர் தீர்த்தம் வாங்கி, இன்னொருவரின் கைகளில் இடுவது தவறாகும். 

அதே போல பொங்கல்,புளியோதரை போன்ற பிரசாதங்களை வாங்கும் பொழுது சிலர், கைகளில் இருக்கும் பிரசாதத்தை அப்படியே வாயினால் கடித்து சாப்பிடுவதை வழக்கமாக்கி வைத்திருப்பார்கள்.இதுவும் தவறு.வலது கையில் பிரசாதம் வாங்கி, இடது கையில் வைத்து, வலது கையினால் தான் எடுத்து சாப்பிட வேண்டும். 

prasatham

நமது உள்ளங்கையில் அத்தனை தெய்வங்களும் குடியிருப்பதாக ஐதீகம். இது தெரியாமல், கைகளால் சாப்பிடத் தெரியாத ஒரு தலைமுறையை ஸ்பூன் கலாசாரத்திற்கு பழக்கப்படுத்தி வருகிறோம்.ஆன்மிகத்தோடு ஆரோக்கியத்தையும் சேர்த்தே பெரியவர்கள் கற்றுத் தந்தார்கள். அள்ளி இறைத்து சாப்பிடுகிற குழந்தைகள், நாள் ஆக ஆக சரியான உணவு முறைக்குப் பழகி விடுகிறார்கள். 
குழந்தைகளை அவர்களாகவே கைகளால் எடுத்து சாப்பிட பழக்கி வாருங்கள். உணவு ருசியும், சத்தும் அப்பொழுது தான் அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.

admin Sun, 06/09/2019 - 13:57
temple prasatham பிரசாதம் ஆன்மிகம்

English Title

if u get parsatham from temple it wii became sin

News Order

0

Ticker

0 
temple

கோவிலில் சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்! அதன்பின் நடந்த விபரீதம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலில் இளைஞர் ஒருவர் சிறுமியிடன் மிகவும் நெருக்கமாக அத்துமீறி நடந்துகொண்டதால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.


ஸ்ரீபரசமய கேளரிநாதர் ஆதீனம்

திருநெல்வேலி ஆதீனத்தில் தகராறு : பூட்டுப்போட்டது  போலீஸ்!

கொஞ்ச காலமாகவே தமிழகத்தில் ஆதீனங்கள் அடிக்கடி செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நெல்லையில் பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் ஸ்ரீகோளரிநாத ஆதீனத்தில் தகர...


கடவுள்

இங்கு நடக்கும் பூஜையை காண்பவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவு பஞ்சமே இருக்காது… பாடல்பெற்ற தலங்கள் வரிசை :- 14 சீர்காழி

மயிலாடுதுறையில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ.பிரம்மபுரம், வேணுபுரம், புகலி,வெங்குரு,தோணிபுரம்,பூந்தராய்,புறவம்,சண்பை,காளிபுரம்,கொச்சைவயம்,கழுமலம்,காழி என்று 12 பெயர்கள் கொண்ட இந்த பி...


rain

எப்படியாச்சும் மழை பெஞ்சிடனும் சாமி! கழுத்தளவு நீரில் நாதஸ்வரம் இசைத்த கலைஞர்கள்

மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள குளத்தில் நாதஸ்வர கலைஞர்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தனர்


சுவேதாரன் யேஸ்வரர் கோவில்

சோம தீர்த்தத்தில் நீராடி புதனை வழிபட்டால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்..பாடல் பெற்ற தலங்கள் வரிசை -11, திருவெண்காடு

சீர்காழியில் இருந்து பூம்புகார் போகும் சாலையில் 13 வது கி.மீட்டரில் இருக்கிறது திருவெண்காடு.ஆதி சிதம்பரம், சுவேதாரண்யம்,பேரரங்கம் என பல பெயர்கள் கொண்டதலம்.காசிக்கு இணையாக சொல்லப்பட...


 மயேந்திரப்பள்ளி

பாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி

சிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப...


கூத்தாண்டவர்

கூத்தாண்டவர் இப்போதிருக்கிற ஊருக்கு எப்படி வந்தார் என்ற கதை தெரியுமா!?

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்தில் இருக்கும் அருணாபுரம் கிராமத்தில் இப்போது குடிகொண்டுள்ள கூத்தாண்டவர் 515 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் செங்கத்தில் இருந்து கடத்த...


திருநங்கையர் திருவிழா

தொடங்கியது திருநங்கையர் திருவிழா! கூத்தாண்டவர் கோவில் வரலாறு தெரியுமா?

திருநங்கைகள் என்று அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவரின் திருவிழா ஆண்டு தோறும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விழா நேற்று சாகை வார்த்தல...


டேனியல் பாலாஜி

கோவில் கட்டிய டேனியல் பாலாஜி: குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் டேனியல் பாலாஜி ஆவடி அருகில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


spiritual

பாடல் பெற்ற தலங்கள் வரிசை:-3 செவ்வாய்,மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபூஜை செய்தால் சனி தோஷம்,செவ்வாய் தோஷம் விலகும்

திருநெல்வாயில் அரத்துறை.இந்தப்பழம் பெயர் இப்போது மாறிவிட்டது. இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள இந்த ஊரின் பெயர் திருவட்டத்துறை ஆகிவிட்டது. விருத்தாசலம் தொழுதூர் சா...

2018 TopTamilNews. All rights reserved.