• October
    15
    Tuesday

Main Area

Main



தெலங்கானாவின் டாப் பணக்கார வேட்பாளர்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விஸ்வேஸ்வர் ரெட்டி (கோப்புப்படம்)
விஸ்வேஸ்வர் ரெட்டி (கோப்புப்படம்)

ஹைதராபாத்: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தெலங்கானா மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு வெளிவந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இது ஒருபுறமிருக்க வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பொதுவாக வேட்புமனு தாக்கலின் போது சொத்து விவரங்கள், வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள், குற்ற விவரங்கள் தாக்கல் செய்யப்படும். அதன் மூலம் வேட்பாளர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளி உலகுக்கு தெரியவரும்.

அந்த வகையில், தெலங்கானா மாநிலம் செவ்வேலா மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வேஸ்வர் ரெட்டியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.895 கோடி என இவர் குறிப்பிட்டுள்ளார். இவரது பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள் ரூ.223,59,17,232 கோடியாகும். இவரது மனைவியும், அப்பல்லோ மருத்துவமனையின் இணை இயக்குநருமான, சங்கீதா ரெட்டியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.612,96,35,315 கோடியாகும். இவர்களை சார்ந்திருக்கும் இவர்களது மகனின் அசையும் சொத்து மதிப்பு ரூ.19,82,66,223 கோடியாகும். இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் சொந்தமாக இல்லை.

sangitareddy

அதேபோல், விவசாய நிலம், குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட விஸ்வேஸ்வர் ரெட்டியின் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.36,20,01,800 கோடி, அவரது மனைவியின் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.1,81,08,600 கோடியாகும். இவரது பெயரில் விவசாய நிலங்கள் மட்டுமே உள்ளன. அதேபோல், விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு ரூ.4 கோடியும், அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ.32 கோடியும் கடன் உள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு விஸ்வேஸ்வர் ரெட்டி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது குடும்பத்துக்கு ரூ.528 கோடி சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது, 2014 மற்றும் 2019 காலகட்டங்களில் அவரது சொத்து மதிப்பு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.

vishweshwar reddy

தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் செவ்வேலா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வர் ரெட்டி, கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து, தற்போது செவ்வேலா மக்களவை தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி கட்சி சார்பில் ரஞ்சித் ரெட்டி என்பவர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

chandrababu naidu

ஆந்திர மாநிலத்துக்கு மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில், நெல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாராயணா கல்வி குழுமத்தின் நிறுவன தலைவரும், ஆந்திர அமைச்சருமான நாராயணா, தனக்கு ரூ.667 கோடி சொத்துக்கள் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

jagan mohan reddy

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்ப சொத்து மதிப்பு ரூ.574 எனவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கும், தனது மனைவிக்குமான சொத்து மதிப்பு ரூ.500 கோடி என தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.