• February
    27
    Thursday

Main Area

Main



சென்னையில் மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..

tamilisai soundararajan
tamilisai soundararajan

தமிழக பாஜக கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்த, தமிழிசை சௌந்தர ராஜனைக் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்தது. அதன் பின், தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசை, அம்மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இருப்பினும், தமிழகத்திற்கு அவ்வப்போது வந்து செல்கிறார். 

ttn

பொங்கல் பண்டிகையின் போது அரசு விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் கடந்த சில நாட்களாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அதே போல, இன்று தமிழிசை சௌந்தர ராஜன்,சென்னை  சாலிகிராமத்தில்  உள்ள அவரது இல்லத்தில் தனது குடும்பத்துடனும் மக்களுடனும் சேர்ந்து பொங்கல் வைத்துக் கொண்டாடி உள்ளார். 

ttn

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தர ராஜன், "தனக்குக் கொடுக்கப்பட்ட ஆளுநர் பதவி ஏதோ  அலங்காரத்திற்காக இல்லாமல் மக்களுக்குச் சேவை செய்வதற்காக என்பதை நான் உணர்ந்து பணியாற்றுகிறேன். தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் இடையே உள்ள சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கு நான் பாலமாக இருப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமிழிசை. 

2018 TopTamilNews. All rights reserved.