• February
    21
    Friday

Main Area

Main



மலேசியாவில் ரூ.20 லட்சம் கேட்டு சிறைவைக்கப்பட்ட வாலிபர்... சிவகங்கை கலெக்டர் முயற்சியால் மீட்பு

மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விஸ்வநாதன்
மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விஸ்வநாதன்

மலேசியாவில் கொத்தடிமையாக விற்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் முயற்சியால் மீட்கப்பட்டார். 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரிய உஞ்சனையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (33). குடும்ப வறுமை காரணமாக இவர் கடந்த 2016ம் ஆண்டு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். வேலைக்காக இடைத் தரகருக்கு ரூ.1.30 லட்சம் செலுத்தியிருந்தார் விஸ்வநாதன். ஆனால், பணத்தை பெற்ற அந்த இடைத் தரகர் விஸ்வநாதனை ஒரு கடையில் மாத அடிப்படையில் கொத்தடிமையாக வேலைக்க சேர்த்துவிட்டார். கடை உரிமையாளர் மாதாமாதம் எனக்கு சம்பளமாக கொடுத்த பணத்தை அந்த இடைத்தரகரே வாங்கிக்கொண்டார். இப்படி 11 லட்ச ரூபாயை அந்த இடைத்தரகர் வாங்கியதாக கூறப்படுகிறது. 

malaysia-person


இதற்கு மேல் இங்கு வேலை செய்ய முடியாது என்னை ஊருக்கு அனுப்புங்கள் என்று விஸ்வநாதன் பிரச்னை செய்யவே, அவரை அந்த இடைத்தரகர் தன்னுடைய இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து விஸ்வநாதனின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு விஸ்வநாதன் உயிரோடு வர வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அவர்கள் ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளனர். மீதி பணம் வந்தால் மட்டுமே விஸ்வநாதனை அனுப்ப முடியும் என்று கராராகக் கூறவே, இது குறித்து சிவகங்கை கலெக்டரிடம் புகார் செய்தனர்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட கலெக்டர், மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து தகவல் அனுப்பினார். அவர்கள் விசாரணை நடத்தி, மலேசிய போலீஸ் உதவியுடன் விஸ்வநாதனை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைத்தனர். தமிழகம் திரும்பிய விஸ்வநாதன் நேற்று சிவகங்கையில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்து கலெக்டருக்கு நன்றி கூறினார். 
பின்னர் இது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், "நல்ல நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி என்னிடமிருந்து இடைத்தரகர் பணம் பெற்றார். ஆனால், கடையில் என்னை சேர்த்துவிட்டார். கொத்தடிமை போல இருந்தேன். எனக்கு பதில் என்னை அனுப்பிய தரகர் என் சம்பள பணத்தைப் பெற்றுக்கொண்டார். மேலும் என்னை இந்தியாவுக்கும் அனுப்ப முடியாது என்று கூறினார். என்னுடைய பாஸ்போர்ட்டை பறித்துக்கொண்டனர். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனால் தமிழகம் திரும்புவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. கலெக்டர் முயற்சியால் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. னி யாரும் என்னைப் போல் பாதிக்கப்படாமல் இருக்க அந்த இடைத்தரகர் மீது கடும் நடவடிக்கை எடுத்து" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.