• November
    18
    Monday

Main Area

Main



டாட்டா காட்டிய ஃபானி புயல்...விடுவோமா நாங்க; தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் மழைக்காக யாகம் நடத்த கோயில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தாமதமாக தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி நிறைவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை. கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. கஜா தவிர்த்து, மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்று விட்டதால் மழை இல்லை.

summer

தமிழகத்தில் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, பல்வேறு பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ‘ஃபானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி ஓடிசாவை நோக்கி சென்று சென்று நம்மை ஏமாற்றி விட்டது.

cyclone

இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்த கோயில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், மழைக்காக யாகம் செய்யப்படும் கோயில்களின் விவரங்களை அனுப்பவும் மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

rain yagna

திருமறை ஓதுதல், ராகங்கள் வாசித்து வழிபாடு, நீர் விரய அபிஷேகம், பதிகங்கள் ஓதுதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு யாகங்கள் நடத்தவும் கோயில் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.