• August
    25
    Sunday

Main Area


600 பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்த ஐ.டி ஊழியர்!

சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து நிர்வாண புகைப்படங்களை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையைச் சேர்ந்த ஐடி பொறியாளர் பிரதீப் 16 சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து, நிர்வாண புகைப் படங்களை வாங்கியுள்ளார்.  ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதீப் மீது புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னிடம் நிர்வாணப்படம் அனுப்பக் கூறி பிரதீப் ஏமாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டையடுத்து ஐதராபாத் போலீசார் பிரதீப்பை சென்னையில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.  தொடர்ந்து இரவு பணியில் ஈடுபட்டுவந்ததாகவும், மனைவியின் செயலால் மன அழுத்ஹ்டம் அடைந்தேன். இதனால் பல பெண்களின் தொலைப்பேசி எண்களை வேலைவாய்ப்பு கன்சல்டன்சி மூலம் எடுத்து பேச தொடங்கினேன், அவர்களின் புகைப்படங்களை பார்க்க ஆசைப்பட்டேன், ஓய்வில்லாத வேலையும், காதல் இல்லாத மனைவியின் செயலே தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல் பெண்களிடமிருந்து நிர்வாண வீடியோக்களையும் பெற்றுள்ளதை பிரதீப்பே ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் பெண்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். 

aishwarya Sat, 08/24/2019 - 20:14
IT employee who caught 600 women cheating naked video தமிழகம்

English Title

IT employee who caught 600 women cheating naked video

News Order

0

Ticker

1 கடைக்குள் புகுந்து பாதாம், பிஸ்தா, சாக்லேட், பழத்தை ஆட்டையப்போட்ட திருடன்!

பெங்களூருவில் உள்ள கடைக்கு திருட சென்ற திருடன் ஒருவன், அங்கிருந்த பேரிச்சம்பழம், தேன் ஆகியவற்றை திருடி சென்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை அஸ்வத்தப்பா, பனஸ்வாடி என்ற பகுதியில் தோட்டக்கலை உற்பத்தியாளர்களின் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க சங்கம் கடையில் பணியாளராக பணியாற்றிவருகிறார்.

வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டு காலை கடைக்கு திரும்பியுள்ளார். கடைக்கு வந்த அவர், திகைத்து நின்றார் காரணம் அவர் ஷட்டரை திறந்து பார்த்தபோது அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் அந்த திருடன் கடையிலிருந்த 3 கிலோ பேரிச்சம்பழம், 3 கிலோ விதை இல்லாத திராட்சை, 2 கிலோ உலர் திராட்சை, அரை கிலோ பாதாம், 10 பாட்டில்கள் குல்கண்ட், சாக்லெட், 18 பாட்டில்கள் தேன் மற்றும் ஜாம் பாட்டில்கள் மற்றும் பிற சிற்றுண்டி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. அத்துடன் கல்லாபெட்டியையும் சூறையாடி சென்றுள்ளான்.

aishwarya Sat, 08/24/2019 - 19:34
theft thieft தமிழகம்

English Title

Thieves run off with honey, dry fruits in Bengaluru's HRBR

News Order

0

Ticker

1  திருமணம் முடிந்த கையோடு தூக்கில் தொங்கிய மருத்துவ மாணவி! 

திருச்சியில், திருமணம் முடிந்து கல்லூரி திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அம்புஜவல்லி பேட்டையை சேர்ந்த கயல்விழி திருச்சி கே.ஏ.பி. விஷ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரியில், எம்.எஸ் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் மருத்துவ படிப்பு பயின்று வரும் சக்தி கணேஷ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விடுப்புக்கு பின்னர் திருச்சியிலுள்ள கல்லூரிக்கு கயல்விழி திரும்பியுள்ளார்.

இந்நிலையில் யாருடன் பேசாமல் தனியாக இருந்த கயல்விழி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் வெகுநேரம் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது கயல்விழி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கயல்விழியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த கயல்விழியின் பெற்றோர் அவரது உடலில் காயமிருப்பதாகவும், மகள் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் அலசி வருகின்றனர்

aishwarya Sat, 08/24/2019 - 18:55
Student Trichy Medical student suicide தமிழகம்

English Title

Trichy Medical student suicide

News Order

0

Ticker

1 கள்ளக்காதலுக்கு இடையூறு! குழந்தைகளுக்கு விஷம்வைத்து கொன்ற தாய் கைது!!

மேலூர் அருகே, தவறான உறவுமுறைக்கு இடையூறாக இருந்ததாக, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த ராகவானந்தம் மற்றும் ரஞ்சிதா தம்பதிகளின் குழந்தைகளான, பார்கவி மற்றும் யுவராஜ் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அருகே கிடந்த எலி மருந்து கலந்த கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்,இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராகவானந்தன், குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறிய புகாரையடுத்து, கீழவளவு காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனது தவறான உறவுமுறைக்கு இடையூறாக இருந்ததாக குழந்தைகள் பார்கவி மற்றும் யுவராஜூக்கு, பெற்ற தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொலை செய்து விட்டு, குழந்தைகள் விளையாடும் போது யாரோ வைத்த எலி பிஸ்கட் கலந்த கேக்கை சாப்பிட்டு விட்டு உயிரிழந்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது. இதனையடுத்து கீழவளவு காவல்துறையினர் தாய் ரஞ்சிதா மற்றும் கள்ளக்காதலனான அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கல்யாணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தவறான உறவுமுறைக்காக பெற்றக் குழந்தைகளையே தாய் விஷம் வைத்துக் கொன்றது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

aishwarya Sat, 08/24/2019 - 18:28
Love Mother killed children தமிழகம்

English Title

Mother killed children

News Order

0

Ticker

1 காவேரி தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் காவிரி தொலைக்காட்சி, கடந்த சில மாதங்களாக அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவந்தது. மாதக்கணக்கில் சம்பள பாக்கி இருந்து வந்துள்ளது.  நிதி நிலை சிக்கலே இதற்குக் காரணம் என்று கூறிய நிர்வாகம், மறுபுறம் ஆட்களை பணியில் சேர்ப்பதையும் நிறுத்தவில்லை.  இதையடுத்து ஒரேநாளில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது காவிரி நிறுவனம். இதுகுறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியும் எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின் அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.  காரணம், கொடுக்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை கேட்கச்சென்ற ஊழியர்களை தள்ளிவிட்ட அதன் இயக்குநர் இளங்கோவனோ , ‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... எவன்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ. இங்கேயே கிடந்தாலும் பரவால்ல. வாட்ச்மேனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எனக்கு மிச்சம்!’ என திமிருடன் பதிலளித்துவிட்டு, அங்கிருந்த பெண்களை தள்ளிவிட்டு காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.இதனால் ஊழியர்கள் அண்ணாநகர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

manikkodimohan Sat, 08/24/2019 - 13:32
தமிழகம்

English Title

cauvery tv employees darna

News Order

0

Ticker

0 நைட் ஷிஃப்ட் போனா, பகல்ல தூங்குக்கப்பா, இல்லேன்னா இந்தாளுமாதிரி கம்பி எண்ணவேண்டி வரும்!

க்ளமெண்ட் ராஜ் செழியன் என்கிற பிரதீப். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வருவதுபோல நான்கு பேரை கொண்டவராக இருக்கும் பிரதீப்பின் கேரக்டர் எல்லாம் அந்தப்படத்தில் வரும் மைக்கேல் போன்றது. சென்னையின் முக்கிய சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கைகால் நிறைய சம்பளம். அவருடைய மனைவியும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்கிறார். எனவே, குடும்ப வருமானத்துக்கு குறைச்சல் இல்லை. ஒரு கதவை திறக்கும் இறைவன் மறு கதவை மூடுவதுபோல, கணவன் மனைவி இருவரும் நல்ல வேலையில் இருந்தாலும், ஒரே வீட்டில் இருந்தாலும், சந்திப்பதற்கு வாய்ப்பு குறைவு. காரணம், பிரதீப்புக்கு இரவு வேலை, அவர் மனைவிக்கு பகல் வேலை. பகல் பொழுதில் தூங்கி எழுந்தபிறகு பொழுதுபோகாத நேரத்தில் கிரிமினல் வேலை செய்திருக்கிறது அவரது மூளை.
 

போலியான வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்று நடத்த துவங்கியிருக்கிறார். சென்னையில் முக்கியமான நிறுவனங்களின் பெயரைச் சொல்லி ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார். ஏகப்பட்ட பெண்கள் வேலைக்கு விண்ணப்பத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து வந்த விண்ணப்பங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வெளிமாநில பெண்கள் ஒவ்வொருவராக தொடர்புகொண்டு, வேலை கிடைத்துவிடும், நல்ல சம்பளம் என தேனொழுக பேசியிருக்கிறார். எந்தளவு தேனொழுகல் என்றால், பிரதீப் பேச்சை நம்பி அப்பெண்கள் அவர்களின் நிர்வாண போட்டோக்களை அனுப்புவது வரை. அதன்பின், அந்த போட்டோக்களை காட்டி, நிர்வாணமாக வீடியோகால் பேசச்செய்வது என ஒருவரை அல்ல இருவரை அல்ல 600 பேரை ஏமாற்றியிருக்கிறான். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்மட்டும் வேலை கிடைக்காததால் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் தர, சென்னைக்கு வந்து சல்லடை போட்டுத் தேடி பிரதீப்பை அள்ளிக்கொண்டுபோய்விட்டது.

gunaseelan Sat, 08/24/2019 - 12:24
தமிழகம்

English Title

Chennai software professional runs fake employment service and gets nudes of 600 women

News Order

0

Ticker

1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு!

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பேராசிரியருக்குக் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் ஒரு மாணவி கடந்த டிசம்பரில் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்திருந்தார். அதில் பேராசிரியர் கர்ண மகாராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். இந்த புகாரின் பேரில் பேராசிரியர் குறித்து  விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் மீதான புகாரில் உண்மை உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதில் ஆராய்ச்சி மாணவி அளித்த புகார் உறுதி செய்யப்பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனுக்குக் கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

manikkodimohan Sat, 08/24/2019 - 12:00
தமிழகம்

English Title

madurai kamaraj university dismissed professor karna maharajan

News Order

0

Ticker

0 ஒரு கள்ளக்காதல் கதை சொல்லட்டுமா சார்!

சங்கர்லால். யாரு இந்த துப்பறியும் சங்கர்லாலுங்களா? இல்லை, இவர் சென்னை மடிப்பாக்கம் காந்திநகரைச் சேர்ந்தவர், சிதம்பரம் பகுதியில் ரவுடியிசம் செய்துவந்தவர், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடம் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டவர். ராஜா, ஒத்த கை ராஜா. இவர் யார்? சங்கர்லாலால் ஒத்த கை ராஜா என பெயர் வாங்கியவர், அதாவது ராஜாவின் ஒத்த கையை வெட்டப்பட்டு, மிச்சம் ஒரே ஒரு கையோடு திருப்பூருக்கு ஓடிவந்து தொழிலை தொடர்ந்தவர். ஆசை நாயகி! யாருக்கு? அட பெயரே அதாங்க. மரகதவள்ளி அலேஸ் மேகி மாதிரி ஆசை நாயகி அலேஸ் அருணா. ஆசைநாயகிக்கும், சங்கர்லால், ஒத்த கை ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? முக்கோண கள்ளக்காதல்.

சிதம்பரத்தில் இருக்கும் ஆசை நாயகிக்கும் சங்கர்லாலுக்கும் தொடர்பு. சங்கர் லால் தொழில் நிமித்தமாக சிறைசென்று மீண்டு வரும்வரையில் ஆசை நாயகிக்கும் ராஜாவுக்கும் தொடர்பு. கோபாவேசத்தோடு சிறையிலிருந்து மீண்டுவந்த சங்கர்லால், ராஜாவை, ஒத்த கை ராஜாவாக்கினார். வெட்டப்பட்ட ஒத்தகையோடு திருப்பூரில் அரசியல் தஞ்சமடைந்தார் ஒத்த கை ராஜா. திரும்பவும் சங்கர்லாலும் ஆசை நாயகியும் உறவை புதுப்பிக்கின்றனர். சங்கர்லால் வீட்டில் தோட்டக்காரர், சமையல்காரர் என நிறைய வேலையாட்கள் போல, ஆசை நாயகிக்கும் சங்கர்லாலுக்குமான மனஸ்தாபத்தில் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆசை நாயகி. தன் கை வெட்டுப்பட்டபோதுகூட வெள்ளைக்கொடி பறக்கவிட்டு ரத்த பூமியைவிட்டு வெளியேறிய ஒத்த கை ராஜாவுக்கு, ஆசை நாயகி விஷம் குடித்த தகவல் தெரியவருகிறது. நியாயம் கேட்க 5 பேரோடு சென்னைக்கு வந்த ஒத்தகை ராஜா, சண்டையில் சங்கர்லாலை அமரராக்குகிறார். மூன்று நாட்கள் கழித்து ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆறு பேரும் சரணடைந்தனர்.

gunaseelan Sat, 08/24/2019 - 11:52
தமிழகம்

English Title

Extra marital affair kills one, murderers surrender in court

News Order

0

Ticker

1 சிசிடிவி காட்சிகளை ஷேர் செய்தால் குற்ற நடவடிக்கை – போலீசாருக்கு எச்சரிக்கை!

கையில் கிடைத்த வீடியோவை வாட்சப்பில் உடனடியாக ஷேர் செய்யாவிட்டால் தெய்வகுத்தமாகிவிடும் அளவுக்கு பரபரவென ஆகிவிடுகிறது. சாலையில் நடக்கும் விபத்துகள், கொலை கொள்ளை முயற்சிகள், ப்ராங்க் ஷோக்கள் என எல்லாமே வீடியோவாகி, ஷேராகி, லைக்குகளாகவும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. பொதுமக்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்றால், காவல்துறையினரில் சிலரும் தங்கள் கவனத்துக்கு வரும் முக்கிய வீடியோக்களை வாட்சப் குரூப்களில் ஷேர் செய்து பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டுவிட்டதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால், சமயங்களில் குற்ற வழக்குகளில் முக்கிய தடயங்கள், சம்பவ இடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைகூட காவலர்கள் வெளியிட்டுவிடுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பார்வைக்கும் வீடியோ காட்சிகள் போகும்போது, சாட்சியங்களை அழிப்பதற்கும், மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கும் தோதாக அமைந்துவிடுகிறது. எனவே, தங்கள் கவனத்துக்கு வரும் வீடீயோக்களை பொதுவெளியில் ஷேர் செய்யக்கூடாது என சென்னை சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் சசிமோகன், போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல்பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுவதால், அத்தகைய கேமரா பதிவுகளை போலீசார் வாட்ஸ் ஆப் குரூப்பில் செய்வது சாட்சிகளை கலைத்த குற்றமாக கருதப்படும். இனியும் ஷேர் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது சாட்சியை கலைத்ததற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என துணை கமிஷனர் சசிமோகன் எச்சரித்துள்ளார்.
 

gunaseelan Sat, 08/24/2019 - 11:16
தமிழகம்

English Title

DC Sasi Mohan warns police not to share CCTV footages

News Order

0

Ticker

1         
2018 TopTamilNews. All rights reserved.