• October
    14
    Monday

Main Area

Main



கணிக்கக்கூடிய இடங்களைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்- தமிழிசை உறுதி

Tamilisai
Tamilisai

தமிழகத்தில் கருத்துக் கணிப்புகள் மாறுபடும் அகில இந்திய அளவிலும் மாறுபடும். கணிக்கக்கூடிய இடங்களை விட அதிக இடங்களில் பெறுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த தமிழிசை, ”பாரதிய ஜனதா கட்சியின் மிகுந்த உற்சாகத்தோடு முடிவுகள் எதிர்நோக்கியிருக்கிறோம். வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் ஊக்கப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த கருத்துக் கணிப்புகள் மாறுபடும் அகில இந்திய அளவிலும் மாறுபடும். கணிக்கக்கூடிய இடங்களை விட அதிக இடங்களில் பெறுவோம். தமிழகத்தில் கள நிலவரத்தை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்துவருகிறது. ஆகவே பாஜக அதிமுக கூட்டணி அதிக இடங்களை பெறும். அதேபோல 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும். இது மக்கள் தீர்ப்பு. தங்களுக்கு சாதகமாக வரும் பொழுது எதிர்க்கட்சிகள் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்படவில்லை என்று குற்றச்சாட்டு சொல்லவில்லை, அதே நேரத்தில் கருத்துக்கணிப்பு அவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய காரணத்தினால் இன்று வாக்கு இயந்திரங்கள் மீது சந்தேகிக்கின்றனர்.

தூத்துக்குடி மக்களிடம் என் நேர்மையை முன்னிறுத்தி வாக்குகள் சேகரித்திருக்கிறேன். எனது தூய்மையான அரசியல் வாழ்க்கையை முன்னிறுத்து வாக்கு சேகரித்து இருக்கிறேன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை சொல்லி வாக்குகள் பெற்றுள்ளேன், 20 ஆண்டுகால அரசியல் பொது வாழ்வில் தூத்துக்குடி மக்கள்  அங்கீகாரத்தை தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன் நிச்சயமாக வெற்றி பெறுவேன். 

தமிழக தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது என்று சொல்வதற்கான காரணம் இரண்டு ஆளுமைகள் தமிழகத்தில் இல்லை. அதே போல மூன்று புதிய புத்தகங்கள் கமலஹாசன், டிடிவி தினகரன் மற்றும் சீமான் இவர்கள் எல்லாம் எந்த அளவுக்கு இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலை மீண்டும் மோடி வர வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களுக்கு உள்ளது” என்று கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.