kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


சரத்குமார் ஒரு சாதனைக்குமார்...! தமிழிசை அதிரடி!!

Tamilisai
Tamilisai
Loading...

காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்து சரத்குமார் சாதனைக்குமாராக மாறியுள்ளார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கர்மவீரர் காமராஜரின் புகழ், அவருடைய சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் முயற்சி, உழைப்பால் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.  மணி மண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

விருதுநகரில் நடைபெறும் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை செளந்தர்ராஜன், “விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் ரயில் நின்று செல்ல ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சரத்குமாருக்கு பக்கபலமாக இருந்து வருகிறது.  காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்து சரத்குமார் சாதனைக்குமாராக மாறியுள்ளார்

தமிழ் என்னைப் பெற்றதால்தான் நான் தமிழ் பேசுகிறேன். காமராஜரின் தொண்டரின் மகளாக இருப்பதால்தான் நான் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறேன். பண மதிப்பிழப்பீட்டை அமல்படுத்திய திட்டத்தை காமராஜர் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என மோடியே எங்களிடம் கூறியிருக்கிறார். நல்லது செய்பவர்களை மட்டுமே இந்த சமூகம் விமர்சனம் செய்து கொண்டே இருக்கும், குறிப்பாக கருப்பாக உள்ளவர்களை இந்த சமூகம் அதிகம் விமர்சிக்கும். இந்த தேர்தலில் சற்று கோட்டை விட்டாலும் நமது நோக்கம் கோட்டையை பிடிப்பதே” என்று கூறினார். 
 

2018 TopTamilNews. All rights reserved.