darbar
  • January
    20
    Monday

Main Area

Main



"அத பத்தி அப்புறம் பேசலாம்"...கதம்...கதம்...; நடிகர் ரஜினிகாந்த்

rajinikanth
rajinikanth

சென்னை: பேட்ட திரைப்பட கொண்டாட்டத்திற்கு இடையே, அரசியல் தலைவராக எப்போது மாறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. எதிரியை சூழ்ச்சி பண்ணி வீழ்த்துறது தப்பே இல்ல” உள்ளிட்ட படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் வசனங்கள் ரஜினி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த பெருமைகள் அனைத்தும் இயக்குனர் கார்திக் சுப்புராஜை சேரும் என கூறிய ரஜினி, ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது நடிகனின் கடமை என்றும் தெரிவித்தார்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த ரஜினியிடம், கபாலி, காலா, பேட்ட என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறீர்கள். நடிகர் ரஜினி எப்போது தலைவர் ஆவார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, "அத பத்தி அப்புறம் பேசலாம்" என கூறி விட்டு சென்றார்.

2018 TopTamilNews. All rights reserved.