• November
    22
    Friday

Main Area

Main



சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் 

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளங்களே நடித்துள்ளனர்.

இதில் திரைநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ஒரு புறம் பாராட்டு கிடைத்தாலும் மறுபுறம் சில திருநங்கைகள் எதிர்ப்புகளும் தெரிவித்தனர். மேலும் இந்த படத்தை மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த  இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.