• October
    15
    Tuesday

Main Area

Main



அருமையான மனுசனாச்சே, சுந்தர் பிச்சைக்கா இப்புடி ஒரு நிலைமை?

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

பதறாதீங்க பதறாதீங்க, கச்டமான செய்திதான் ஆனா கெட்ட செய்தி இல்ல. உலகின் முதல் 10 பணக்காரர்கள், உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து செயல்படும் பிரபலங்களை சில முக்கிய பத்ரிகைகள் வருடந்தோறும் பட்டியலிடும். அந்தவகையில், உலக நிறுவனங்களிலேயே சிறந்த தலைமை செயல் அதிகாரி  யார்யார் என்ற பட்டியலை ரெப்ட்ராக் என்ற நிறுவனம் வெளியிட்டுவருகிறது.

sundar pichai

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நம்ம ஊரு பையன் கூகுளின் சுந்தர் பிச்சை, இந்த ஆண்டு ஒரேயடியாக கீழிறங்கி 88ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர்மீது கூறப்பட்ட பாலியல் புகாரை சுந்தர் பிச்சை டீல் செய்த விதம், அமெரிக்க செனட் சபையில் செனட்டர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தது என இந்த வருடம் முழுமைக்கும் சுந்தருக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.

சுந்தருக்கு மட்டுமல்ல, அமேசானின் ஜெஃப் பெசோஸ், ஃபேஸ்புக்கின் மார்க் என பல டெக்னாலஜி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் தங்களின் முந்தைய வருட இடத்தை தவற விட்டுள்ளனர். இந்த வருடம் விட்டதை அடுத்த வருடம் சுந்தர் பிச்சை பிடிக்க வாழ்த்துவோம்.

2018 TopTamilNews. All rights reserved.