• February
    21
    Friday

தற்போதைய செய்திகள்

Main Area

summer tips
உடல் சூட்டை தணிக்க...மசாலா மோர் குடிச்சுப் பாருங்க!

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே பாதிபேரு உடல் சூட்டாலா அவதிப்படுவாங்க. அப்படியான அந்த சூட்டை தணிக்க மசாலா மோர் குடிச்சி பாருங்க. 

more

தேவையான பொருட்கள்: 

தயிர் - 500 மில்லி

கொத்தமல்லி இலை - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 1 

கறிவேப்பிலை – சிறிதளவு

இஞ்சி - 2 நீளத் துண்டு

தண்ணீர் - ஒரு லிட்டர்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

more

கொத்தமல்லி ,இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டுக் கடைந்து மோராக்கவும். இந்த மோரில், அரைத்த வைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு இதை ஃப்ரிட்ஜில்  வைத்தும் குடிக்கவும். 


 

Aarthi Sat, 05/18/2019 - 17:26
masala more receipe summer tips மசாலா மோர் லைப்ஸ்டைல்

English Title

masala more receipe

News Order

0

Ticker

1 சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே செல்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இது!

ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக பொதுவாக கருதப்பட்டு வந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் ‘ஃபானி’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் திசைமாறி சென்றது. இப்புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து செல்லும் என்பதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வருகிற மே மாதம் 4-ம் தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயிலின் போது கூடுமான அளவிற்கு, மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும், செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது,

சன் ஸ்கிரீன்

sun cream

சன் ஸ்கிரீன் வெயிலில் செல்லும் 15-20 நிமிடங்களுக்கு முன்பே சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். இதனால் சருமமானது அந்த க்ரீம்மை உறிஞ்சி, சருமத்தை சூரிய ஒளியால் கருமையடையாமல் பாதுகாக்கும்.

எலுமிச்சைக்கு நோ

lemon

எலுமிச்சை சருமத்திற்கு நல்லது தான். ஆனால் வெளியே வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினால் 2-3 மணிநேரம் கழித்து வெளியே செல்லுங்கள். இல்லாவிட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் மற்றும் பருக்கள் வர ஆரம்பிக்கும்.

முகப் பருக்கள்

pimple

உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால், அந்த பருக்களை சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சூரிய ஒளியின் தாக்கத்தினால் பருக்கள் உடைந்து, அதனால் முகத்தில் பருக்கள் அதிகமாகிவிடும்.

கூந்தல் பாதுகாப்பு

hat

வெயிலில் செல்லும் போது கட்டாயம் கூந்தலுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். சூரிய ஒளி நேரடியாக கூந்தலில் படுமாயின், கூந்தல் தனது இயற்கையான நிறத்தை இழப்பதோடு, அதிக வறட்சியடைந்து தனது மென்மைத்தன்மையை இழந்துவிடும்.

தண்ணீர் பாட்டில்

heat wave

நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் கூடவே தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்வது நல்லது. வெயிலினால் உடலில் நீர் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் முகத்தை அடிக்கடி கழுவுவதும் நல்லது.

உடைகள்

summer dress

கோடைகாலத்தில் நல்ல காற்றோட்டம் தரக்கூடிய பருத்தி ஆடைகள், லினன் ஆடைகளை அணிவது நல்லது. பெரும்பாலும் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

கூலிங் கிளாஸ்

coolers

கூலிங் கிளாஸ் முக்கியம் சூரிய ஒளி சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் ஆபத்தானது. எனவே வெயிலில் செல்லும் போது கண்களுக்கு பாதுகாப்பு தரும் கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். இதனால் கண்களில் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

smprabu Tue, 04/30/2019 - 18:00
Agni Natchathiram summer tips heat wave beauty tips கோப்புப்படம் லைப்ஸ்டைல்

English Title

Do these things before you go out in Agni Natchathiram

News Order

0

Ticker

0 
beauty tips

உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா...அசத்தலான 5 ஐடியா!

கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலி...

உடல் சூட்டைத் தணிக்க கண்டதையும் குடிக்காதீங்க! இதுதான் பெஸ்ட்!


தேர்தல் ஆணையமே பகல் நேரத்தில் பிரசாரம் செய்யக்கூடாது,மக்கள் கூடும் இடங்களில் போதிய அளவு தெண்ணீர் இருக்க வேண்டியது கட்டாயம்,என்று ஏகப்பட்ட கண்டிசனைப் போட்டிருக்கே எதுக்குன்னு தெரியுமா?
 
வழக்கத்தைவிட வெய்யில் அதிகமா இருக்கிறதுதான் காரணம். ஆணையத்தின் கட்டுப்பாட்டை எத்தனை கட்சிகள் கடைப்பிடிக்கும் என்று தெரியாது! மெனக்கிட்டு எல்லாத்தையும் பார்த்து ‘பார்த்து’ செஞ்சாலும் எல்லாம் எலெக்சன் ரிசல்ட் வர்ற வரைக்கும்தான். அதுக்கப்புறம் நம்மளை நாமளே பார்த்திக்கிட்டாதான் உண்டு.

பகலில் வெளியே செல்ல வேண்டாம் 
 

பிற்பகல் 12 முதல் 3 மணிவரை வெளியில் பயணிப்பதை தவிருங்கள். அவசியம் போயே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே போக வேண்டும்.அப்படி போகிறவர்கள் மெல்லிய வெள்ளைத் துணியை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு மேல் கெல்மெட் போடுங்கள்.பொதுவாகவே பெண்கள் டூ வீலரில் போகும்போது தலையையும் முகத்தையும் மறைத்துக்கொண்டு போவதைப் பார்த்திருப்பீர்கள்.அதே போல்தான் ஆண்களும் கட்டிக்கொண்டு போங்கள்.குளிர் கண்ணாடி கட்டாயம் அணியுங்கள்.இது மாதிரி செய்வதால் உடலுக்குள் வெப்பம் பரவுவதை ஓரளவுக்கு குறைக்க முடியும்.

summer
திரவ ஆகாரம் முக்கியம் 
 

நிறைய தண்ணீர் குடியுங்கள்.அதிக தாகமாக இருக்கிறது என்பதற்காக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை ஒரு போதும் குடிச்சிறாதீங்க. ஜில்லென்று குடிக்கும் போது இதமாகத்தான் இருக்கும்.அதால் ஒரு போதும் உடல் சூட்டை சமன் படுத்த முடியாது.
 
அப்போ,கூல்ட்ரிங்ஸ் கடைகளில் விற்கப்படும் ஜூஸ் சாப்பிடலாமா என்றால், அதிலும் ஆபத்து இருக்கிறது!ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை தொடங்கி எல்லா ஜூஸ்களிலும் பெரும்பாலும் சுவைக்காக,காய்ச்சிய பாலும்,ஒரு நாளைக்கு ஒரு ஜாயிண்ட் ஃபாமிலிக்கு தேவைப்படும் சர்க்கரைக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஒரு ஜூஸில் சேர்க்கிறார்கள்.அதை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடுதான் விளையும்.முடிந்தால் எதுவுமே சேர்க்காமல் பிளைன் ஜூஸ் சாப்பிடுங்கள்.  

ஸ்பெஷல் மோர் 
 

இது,எல்லாவற்றையும் விட சிறப்பானது மோர்.அதிலும் இந்த வகையான  ஸ்பெஷல் மோரை நீங்களே செய்து குடிக்கலாம்.ஒரு லிட்டர் மோர் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.பெரிய பச்சை மிளகாய் இரண்டு, ஓர் மீடியமான வெள்ளரிக்காயில் பாதி அளவு,புதினா, கரி வேப்பிலை கொஞ்சம், தோல் நீக்கிய ஒரு துண்டு இஞ்சி எல்லாத்தையும் மிக்சி ஜாரில் போடுங்கள்.அதோடு ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும், நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் பெருங்காயம் கொஞ்சமும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுத்து மிக்சியில் போட்டு பேஸ்ட்டு பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

நீர் மோர்

இப்போது ஒரு லிட்டர் மோருக்கு தேவையான தயிரை இதோடு சேர்த்து மீண்டும் மிக்சியை ஒரு சூத்து சுத்தவிடுங்கள்.கடுகு,உழுந்தை மட்டும் எண்ணையில் தாளித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.ஒரு நாள் முழுக்க ஒரு நபர் இதைக் குடித்தால் போதும் உடலுக்கு வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
 
ஜில்லென்று குடிக்க ஆசைப்பட்டால் ஐஸ் சேர்க்காதீர்கள்.பாட்டலில் அடைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து ஜில்லானதும் குடியுங்கள்.வெளியில் போகும்போது இதை எடுத்துப் போவதாக இருந்தால்,24 மணி நேரத்திற்கு குளிச்சியாகவும், ஹாட்டாகவும் வைத்திருக்கக் கூடிய பாட்டில் கன்டெய்னர்கள் கடைகளில் கிடைக்கிறது.அதை வாங்கி,அதில் கொண்டு போங்கள்.நார்மலாக தண்ணீர் கொண்டு போகும் பாட்டில்கள் தாங்காது.அடிக்கிற வெயிலுக்கு சீக்கிரம் புளித்துவிடும்.
 
இப்போ டைட்டிலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.என்ஜாய்…

இதையும் படிங்க :

வெய்யில் காலத்தில் காரில் பயணிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம் !

mithra Mon, 03/25/2019 - 16:16
summer dehydration cool drinks summer tips கோடை பானம் லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

English Title

the best drink for summer

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.