• February
    28
    Friday

Main Area

Main



எச்சில் துப்பினால்.... முதல் தடவைன்னா 500 ரூபாய்..... தொடர்ந்து செய்தால் அபராதம் ப்ளஸ் சிறை.. கேரள நகராட்சி அதிரடி

பொது இடத்தில் எச்சில் துப்பும் நபர்
பொது இடத்தில் எச்சில் துப்பும் நபர்

பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கு சிந்துவது போன்றவற்றால் அந்த பகுதிகளில் அசுத்தம் ஆவதுடன், நோய்களின் பிறப்பிடமாகவும் மாறிவிடுகிறது. இதனால் பொது இடங்களில் இது போன்ற செயல்களை செய்வதற்கு நகராட்சிகள் மற்றும் கார்ப்பரேஷன்கள் தடை விதித்துள்ளன. மேலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கின்றன. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அவை எல்லாம் எழுத்தோடு சரி அமலுக்கு வருவதில்லை.

பான் கடை

இந்நிலையில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பாதரி நகராட்சி, பொது இடங்களில் எச்சில் துப்பும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வகையில் அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது குறித்து அந்நகராட்சியின் தலைவர் டி.எல்.சபு கூறுகையில், நாங்கள் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளோம். பொது இடங்களில் எச்சில் துப்புவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் அவர்களை கண்டுபிடிக்க சிறப்பு குழுவையும் அமைத்துள்ளோம்.

பொது இடத்தில் எச்சில் துப்பும் நபர்

முதல் தடவை குற்றம் என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அதே குற்றத்தை செய்தால், நகராட்சி சட்டத்தின்படி, அபராதம் மற்றும் சிறை தண்டனையும் கிடைக்கும். பான் விற்பனையாளர்கள் மற்றும் மற்றவர்களிடம் அவர்களது கடை பகுதியில் கறை தென்பட்டால் அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்படும் என ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இதனையடுத்து அவர்கள் தங்களது கடை பகுதியில் இருந்த எச்சில் கறையை கிளீன் செய்து விட்டனர் மேலும் எச்சரிக்கை போர்டுகளையும் வைத்துள்ளனர் என தெரிவித்தார். சுல்தான் பாதரி நகராட்சியின் முடிவை நாடு முழுவதும் உள்ள நகராட்சி அமைப்புகள் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.