• November
    18
    Monday

Main Area

Main



பிலிப்பைன் நாட்டில் திடீர் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

 நிலநடுக்கம்
நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று திடீரென அதிக அதிர்வுகளுடன் கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, வடக்கு கோடபாட்டோ மாகாணத்தின் மகிலாலா நகரில் இருந்து தென்மேற்கில் 23 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 2 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தகவல் அனுப்பியிருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது என்ற தகவலையும் இந்த புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Earth Quake

இந்த நிலநடுக்கமானது அதிகளவில் தெற்கு பகுதியில் இருக்கும் மாகாணங்களில் தாக்கியது. வழக்கத்தை விட அதிக அளவிலான அதிர்வுகள் தென்பட்டதால் பொதுமக்கள் பலர் வீதிகளில் திரண்டனர். இவர்களை உரிய பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு முகாம்கள் அமைத்து, பகுதி பகுதியாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளையும் ஆங்காங்கே வழிவகை செய்து வழங்கி வருகிறது.

 நிலநடுக்கம்

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என பலவும் சேதமாகின. அருகில் இருந்த மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதைகள் மூடப்பட்டன. இதனால், அங்கு இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தாமதமாகி வருகிறது. 

 நிலநடுக்கம்

முதல் கட்டமாக, தரைமட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. துலுவன் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். அதே பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் மாரடைப்பு வந்து ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார். நிலச்சரிவில் சிக்கி தாய் மற்றும் குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து வருகின்றனர். இதுவரை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

முழுமையாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் முடிவடைந்தால் மட்டுமே மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு என தெரியவரும். தற்போது கூடுதல் முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இட வசதி வழங்கப்பட்டு வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.