• August
    21
    Wednesday

Main Area

Main



தெருத்தெருவாக புரோட்டா கடை துவங்கி, ஊர் ஊராக ஹோட்டல் அமைக்கும் இளம் தொழிலதிபர்!

Suresh
Suresh
Loading...

பழைய இரும்பு, பிளாஸ்டிக், அம்மா மிகிஸி-கிரைண்டர், பட்டுப்புடவைகளை வீடுவீடாகச் சென்று வாங்கி தரம் பிரித்து பின் அதனை நல்ல விலைக்கு விற்று லட்சாதிபதிகள் ஆனவர்கள் நிறைய பேர். ஆனால், ஊரில் இருப்பவர்கள் வீடுவீடாப் போய் குப்பை பொறுக்குறான்  என ஏளனம் செய்வார்கள். செய்யிற தொழில்ல என்ன இருக்கு? எந்த தொழிலைச் செய்தாலும் அர்ப்பணிப்புடன் இருந்தால், விக்ரமன பட பாடல்கள் மாதிரி வாழ்வில் ஏற்றம் மட்டும்தான். என்ன ஒண்ணு, அவர் படத்துல ஒரே பாட்டுல பணக்காரர் ஆகிடுவாங்க, நிஜத்துல அந்த ஒரு பாட்டு முடிய 10 - 12 வருடங்கள்கூட ஆகலாம்.

Suresh

தன்னுடைய 12 வயதில் மெரீனா பீச்சில் தந்தையின் புரோட்டா கடையில் உதவியாக இருந்த சுரேஷ், அரசுப்பள்ளியின் சத்துணவு உண்டு கல்வியும் பெற்றார். பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில், தந்தையார் சின்னச்சாமியின் கடைக்கு அருகிலேயே மற்றொரு கடையையும் அமைத்து, பகுதிநேரமாக படித்து 10ஆம் வகுப்பை முடித்தார். பத்தாம் வகுப்பு தேர்ச்சி 12ஆம் வகுப்பு தேர்விலும் தொடர்ந்தது. உடன் படித்த மாணவர்கள் இவரை பரோட்டா சுரேஷ் கிண்டல் செய்வதுண்டு. புரோட்டா கடை ஒருபக்கம், கல்லூரி ஒருபக்கம்  என வாழ்க்கை ஏணியில் படிப்படியாக ஏறிய சுரெஷ், கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கப்பல் பணிக்குப் பிறகு கைநிறைய பணத்துடன் கரை ஏறியவர், இப்போது சென்னை, தஞ்சாவூர், விக்கிரவாண்டி, என பல இடங்களில் சங்கிலித்தொடர் உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆண்டு வருமானம் 18 கோடிக்கும் மேல். புரோட்டா சுரேஷ் என்று கிண்டல் செய்தவர்கள், இப்போது சுரேஷ் சார் என விளிக்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.