• August
    21
    Wednesday

Main Area

Main



’நானும் மதுரக்காரன்தான்டா...’ ஆதாரங்களை நிரூபிக்கக் கிளம்பிய சுப்ரமணியன் சுவாமி..!

சுப்ரமணியன் சுவாமி
சுப்ரமணியன் சுவாமி
Loading...

சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவர். பா.ஜ.க மூத்த தலைவரான சுப்ரமணிய சாமி, ராஜ்யசபாவில் மத்திய அரசின் நியமன எம்.பி.,யாக இருக்கிறார். சென்னையில் பிறந்திருந்தாலும்  இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், சோழவந்தான். நேரம் கிடைக்கிறபோது சொந்த ஊருக்கு வந்து, குலதெய்வ கோவிலில்  சுவாமி கும்பிட்டு விட்டு செல்வார்.  ஒருமுறை அதிமுக கூட்டணி சார்பில் மதுரை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். swamy

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, சேது சமுத்திரத் திட்டம் தடை வழக்கு என நாடு முழுவதும் சர்ச்சைகளைக் கிளறிய பல வழக்குகளைத் தொடர்ந்தது இவர்தான். எப்போதும் ஏதாவதொரு பரபரப்பைக் கிளப்பிவிட்டு பிஸியாக இருப்பதே இவர் வேலை. வரும்  செப்டம்பர் 15ம் தேதி சுப்ரமணியசுவாமிக்கு  80வது பிறந்த நாள் வருகிறது. இதை மதுரை அல்லது சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில்  பா.ஜ.கவின் தேசிய தலைவர்கள் பலரையும் கலந்து கொள்ள வைக்கவும் திட்டம் போட்டிருக்கிறார்கள். swamy

எனது குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. தக்க நேரத்தில் அதை வெளியிடுவேன்' என சுவாமி இதுவரை 1,308 தடவை கூறியுள்ளார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. அதனை தனது 80 வது பிறந்த நாளில் இந்த சாமி வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. swamy

அந்த வகையில் நானும் மதுரைக்காரன் தாண்டா என்பதை நிரூபிக்கும் வகையில் பிறந்த நாள்  விழா மதுரையில் நடத்தப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். 

2018 TopTamilNews. All rights reserved.