• March
    31
    Tuesday

Main Area

Main



3 ஆவது நாளாக நீடிக்கும் வேலைநிறுத்த போராட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு அபாயத்தில் மக்கள்!

கேன் குடிநீர்
கேன் குடிநீர்

குடிநீர் உரிமம் பெறாத 132 சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததால், கடலூர் அருகே 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் ,  குன்றத்தூரில்  4 குடிநீர்  சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன் பின்னர் அந்த 132  சுத்திகரிப்பு நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை எதிர்த்தும் குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்கும் உரிமத்தை வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் குடிநீர் சுத்திகரிப்பார்கள் நேற்று முன்தினத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 

ttn

அவர்கள்  2014 ஆம் ஆண்டே உரிமம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதனை அரசு அமல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்ட அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் இதனால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

ttn

மேலும், ஒரு நாளைக்கு 2 லட்சம் கேன்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் உரிமம் வழங்க வழிவகை செய்யவில்லை என்றால் போலி நிலையங்கள் உருவாகும் என்றும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் கேன்களின் விலை இன்னும் அதிகமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளனர். சென்னையை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் குடிநீர் கேன்களையே நம்பியிருக்கும் நிலையில், அதன் விலை உயர்வு ஏற்படும் என்று தகவல் வெளியாவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.