• March
    30
    Monday

Main Area

Main



விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை பாராட்டிய சிம்பு

 நடிகர் சிம்பு
 நடிகர் சிம்பு

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

master

மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின்படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. 

கோடைவிடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின்   குட்டி ஸ்டோரி பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்றது. அனிருத் இசையமைக்க அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

Thank you soooo sooo much #STR sir for the love and positivity and the appreciations for our #KuttiStory song. Much love. Much humbled. So Proud too to recieve the enormous love from u. #AlwaysBeHappy @Dir_Lokesh @Jagadishbliss @anirudhofficial @XBFilmCreators @Lalit_SevenScr

— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) February 16, 2020

இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில்,  நடிகர் சிம்பு குட்டி ஸ்டோரி பாடலை  கேட்டு பாராட்டியதாகத்  தெரிவித்துள்ளார்.  குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.