• November
    19
    Tuesday

Main Area

Main



மு.க.ஸ்டாலினின் முட்டாள் தனம் இது... மானத்தை வாங்கும் மாரிதாஸ்..!

ஸ்டாலின்
ஸ்டாலின்

 

மீண்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் "எந்த நிலையிலும் திமுகவுக்கு எதிராக பின்வாங்கப் போவதில்லை" என பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்,’’ திமுக தலைமைக்கு, எனக்கு நீங்கள் கொடுக்கும் எந்த நேரடி , மறைமுக சட்ட மிரட்டல்கள் உருட்டல்கள் எதற்கும் அஞ்சி பின்வாங்கும் எண்ணமில்லை.

ஒரு உண்மை அது நிச்சயம் வெற்றி பெறும் , அதனை எங்கே எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நான் அறிவேன். அதற்காக முழு வீச்சில் வேலையும் செய்வேன். திமுக அதன் அடிமைகள் காட்டும் எந்த பூச்சாண்டி வேலைக்கும் பின் வாங்கப் போவதில்லை. மீண்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் "எந்த நிலையிலும் பின்வாங்கப் போவதில்லை".

என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, காவல்துறையில் எந்த வழக்கும் என் மீது கிடையாது. வேறு வழி இல்லாமல் தனியாக வழக்கு போட்டு அது இது என்று போய் படம் காட்டுகிறார்கள் திமுக ஆதரவு வட்டத்தினர். அத்தோடு என் யூடியூப் சேனலை  முடக்கவும் , என் நலம் விரும்பிகள் நடத்தும் ஃபேபுக் பக்கங்களை முடக்கவும் தீவிரமாக அலைகிறார்கள். இதற்காக திமுக தலைமை தனி ஒரு குழுவை அமைத்து முழு வீச்சில் என்னை, என் குழுவை முடக்க வேலையைச் செய்கிறது.

ramadoss

அந்த விதம் வழங்கப்பட்ட தனிப்பட்ட வழக்குகள் சம்மனுக்கு நீதிமன்றம் சென்று வந்தேன். அங்கே என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் பின் வாங்கிவிடுவேன் என்று திமுக திக நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதும் இல்லை. நேற்றே என் அடுத்த வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டுவிட்டது.

ஆகவே பாரத அன்னைக்கு இதனை ஒரு மகனாகச் செய்து கொண்டிருக்கிறோம் , அவள் மீண்டும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவேண்டும் அதற்கு திமுக போல் கேடுகெட்ட கொள்ளைக் கார கும்பல்களை ஒழித்துக் கட்ட வேண்டும்.

அதற்கு உங்கள் அனைவரது ஆதரவு என்றும் வேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்து தேசத்திற்கான கடமையை மேற்கொண்டு செய்ய விரும்புகிறேன். பணம் , ரவுடிகள் அவர்கள் கையில் இருக்கலாம் , ஆனால் உண்மையும் இந்த தேசத்தை நேசிக்கும் ஒரு உன்னதமான தேசப்பற்றும் நம்மில் உள்ளது. ஒன்றுகூடி திமுக மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவோம்.

நீதிமன்றம் வந்து என் பாதுகாப்பில் மீது முழு கவனமாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி’’ எனத்தெரிவித்துள்ளா மாரிதாஸ்.
 

2018 TopTamilNews. All rights reserved.