• February
    25
    Tuesday

Main Area

Main



ஆட்சியை பிடிக்க முடியாததால் அடிக்கப்பாயும் ஸ்டாலின்... ஆத்திரத்தில் தி.மு.க..!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

stalin
  
ரவுடி கட்சிதான் இவர்கள் என்பதற்கு கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேச்சே உதாரணம்.  தொண்டர்கள் ப்ரியாணிக்காக ரவுடியாக மாறுவது ஒரு சாதாரணம்.  மதுரை தா.கிருஷ்ணனை ஞாபகம் இருக்கிறதா மக்களே, அது மட்டுமல்ல சென்னையின் சில வீதிகளில் அலறல் சத்தம் கேட்டதாகவும் கேள்வி.  திமுக ஆங்காங்கே இவர்களின் உதிரிக்கட்சிகள் போராட்டம் என்று ஏதாவது ஒன்றை எடுத்து கொண்டு வீதிகளில் கொடிபிடிக்கிறார்கள்.

இந்த கொடிபிடிக்கும் கூட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது?  ஒன்று கட்சியிலிருந்து ஓசி சோறுபோடனும், இல்லை கொஞ்சம் தாமதம் ஆனாலும் பிரியாணி கடைக்காரரை அடித்து புடுங்குவது. மக்களின் மனம் மாறுமா? சீர்தூக்கி பார்த்து வாக்களிப்பார்களா? ஸ்டாலினின் பொறாமையை பார்க்க வேண்டும். கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கவும் முடியவில்லை பணமும் பார்க்கமுடியவில்லை.

 stalin

அதிமுக கொள்ளை அடிப்பதை சகித்துக் கொள்ளமுடியவில்லை. இன்றைய அதிமுகவில் அனைவரும் பணம் பண்ணும் எத்தர்கள் ஆகிவிட்டனர். என்ன செய்ய? நீங்கள் கேட்டபடி மக்களும் எம்.எல்.ஏ.,க்களை கொடுத்தார்கள். அப்படியும் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. பணமும் பார்க்கமுடியவில்லை. ஏதோ அதிமுக மட்டும்தான் மத்திய அரசுக்கு வால் பிடிப்பது போலவும் இவர்கள் மத்திய அரசில் பங்கு வகித்த போது ஏதோ நேர்மையாக இருந்ததுபோல் பேசுகிறார். திமுக மத்தியில் கூட்டணியில் இருந்தபோது இலங்கை தமிழர்களை காட்டிக்கொடுத்து அழித்ததை இனி எத்தனை காலம் ஆனாலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

2018 TopTamilNews. All rights reserved.