• March
    31
    Tuesday

Main Area

Main



தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று வதந்தி பரப்பினாரா ஸ்டாலின்? - வதந்தியை பரப்பும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

mk stalin
mk stalin

தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக ஸ்டாலின் வதந்தி பரப்பினார் என்று போலியான ட்வீட் பதிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், ஸ்டாலின் ட்விட்டரில் அந்த அறிக்கையை வெளியிடும்போது 9 பெர் இறந்ததாக குறிப்பிட்டார் என்று போலியான ட்வீட் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அந்த போலியான ட்வீட்டை எடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

mk-stalin-tweet


அதில், "தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், நம் தலைவர் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு பதிவை போட்டதாய் பொய் தகவல் பரப்பி வருகின்றனர் சமூக விரோதிகள். சட்ட பூர்வ நடவடிக்கை நிச்சயம். இதற்கு பெயர் மோசடி. போர்ஜரி. ஜாக்கிரதை" என்று கூறிப்பிட்டுள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ட்வீட் பதிவை ட்வீட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த நிலையில் இந்த போலியான ட்வீட் பதிவை ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க-வினர் வைரல் ஆக்கி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.