darbar
  • January
    27
    Monday

Main Area

Main



ஸ்டாலின் - உதயநிதிக்கு எதிராக பொங்கியெழுந்த கனிமொழி... திமுகவில் கலகம்..!

கனிமொழி
கனிமொழி

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் சகோதரியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி வலியுறுத்தி வருகிறாராம்.kanimozhi

உள்ளாட்சிகளில் மகளிருக்கு, 50 சதவீதம் கொடுக்க வேண்டும் என சட்டமே இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மகளிர் இடங்களை தி.மு.க., பிரமுகர்களின் மனைவி, மகள் என குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்து விடுவது திமுகவின் வழக்கம். 'இந்த முறை அப்படியில்லாமல் மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும்' என மாவட்டச் செயலர்களிடம் கனிமொழி சொல்லி கட்டளை இட்டு இருக்கிறாராம். இதனால் மாவட்ட செயலாளர்கள், கனிமொழியின் கட்டளையை ஏற்பதா? ஸ்டாலின் உத்தரவை செயல்படுத்துவதா? உதயநிதியின் பேச்சைக் கேட்பதா என்கிற குழப்பத்தில் உள்ளனர்.Stalin

அதே போல் 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது சென்னை, கே.கே. நகர் பகுதியில் மூன்று வார்டுகளுக்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்கு, சீட் கொடுத்தார்கள். இந்த முறையும் அப்படி கொடுக்காமல் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்கும் சீட்  கொடுக்க வேண்டும் என அறிவாலயத்தில், அந்தப் பகுதி தி.மு.க.,வினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 

2018 TopTamilNews. All rights reserved.