• April
    07
    Tuesday

Main Area

Main



அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் மறைவு! - எம்.பி-க்கள் கூட்டத்தை ரத்து செய்த ஸ்டாலின்

mk stalin
mk stalin

அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மரணமடைந்த அதிர்ச்சி காரணமாக தி.மு.க எம்.பி-க்கள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

dmk-meeting


தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் ஒரு அறிக்கையை தி.மு.க இன்று வெளியிட்டுள்ளது.
அதில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பிப்ரவரி 29 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தனர். இதனால், தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பலம் 100ல் இருந்து 98 ஆக குறைந்துள்ளது. அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் மரணம் அடைந்துள்ளதாலும் அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதாலும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.