• August
    21
    Wednesday

Main Area

Main



குட்டை ஆடை அணிவதால் தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகிறது? நடிகைகளைச் சாடிய ஸ்ரீ ரெட்டி! 

ஸ்ரீ ரெட்டி
ஸ்ரீ ரெட்டி
Loading...

சென்னை: 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி கடுமையாகப் பேசியுள்ளார். 

நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமீபகாலமாக சினிமா துறையில் பல சர்ச்சைகளை கிளப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதைக் கூறி பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தினார். 

இருப்பினும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது இவர் தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் குறித்து கடுமையாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவரை கூறுகையில், 'குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற மனித மிருகங்களை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்ய வேண்டும். அப்போது தான் பயம் அவரும். சினிமாவில் நடிகைகள் குட்டை பாவாடை அணிந்து ஆண்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் கெடுக்கிறார்கள். அதனால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கின்றனர். 

ஆனால் இந்த 9 மாத குழந்தை அவனுக்கு என்ன உணர்வைத் தூண்டி இருக்கும். குழந்தை அணிந்த உடையில் என்ன குறை இருந்தது. அவனுக்கு எப்படி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. இந்த அநீதிக்கு பதில் சொல்லப் போகிறார்கள்' என்று கடுமையாகப் பேசியுள்ளார். 

 

2018 TopTamilNews. All rights reserved.