• April
    03
    Friday

Main Area

Main



தமிழ்நாடு அரசியலில் களமிறங்க ஆசைப்படும் ஸ்ரீ ரெட்டி 

ஸ்ரீ ரெட்டி
ஸ்ரீ ரெட்டி

சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் அரசியலில் இணையுள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக  படுக்கைக்கு அழைக்கின்றனர் என தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தி சர்ச்சையைக் கிளப்பியவர் ஸ்ரீரெட்டி. ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சுந்தர்.சி உள்ளிட்டோர் மீது பகிரங்கமாக பாலியல் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

sri reddy

பின்பு லாரன்ஸ் தன் படத்தில் வாய்ப்பு தருவதாக உத்தரவு அளித்த பின் அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில்  பிரபல வாரஇதழ் ஒன்றுக்குகு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் அரசியல் ஆசை குறித்த தெரிவித்துள்ளார். அதில் 'நான் ஆந்திரவில் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பிரச்சாரம் செய்தாலும் தமிழ் நாடு அரசியல் தான் ரொம்ப பிடிக்கும்.

sri reddy

பின்பு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். அவங்க இருந்த வரை அ.தி.மு.க நல்லா இருந்ததுனு எல்லோரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவங்க இறந்த பிறகு, சரியில்லைனு சொல்றாங்க. தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு பெரிய காட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியில் நிச்சயம் இணைவேன்' என்று தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.