• October
    16
    Wednesday

Main Area

Main



என்னது... பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை நடிகையா? 

பிக் பாஸ் 3
பிக் பாஸ் 3

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அதையொட்டி மூன்றாவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாக புரோமோ வீடியோ மூலம் உறுதியானது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 23ம் தேதி முதல் ஒளிபரப்பவுள்ளது. 

இந்த நிலையில் அதையொட்டி இதில் பங்குயேற்கும் போட்டியாளர் யாரு என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காது கொண்டு இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்றனர்.

வழக்கமாக வி.ஐ.பி-க்களை தேர்வு செய்வதை தவிர்த்து சினிமாவில், தொலைக்காட்சியில், சோஷியல் மீடியாக்களில் வைரலான சண்டைக் கோழிகளை செலக்ட் செய்தால் டிஆர்பி ரேட் எகிறும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வருகின்றனர். 

sri

அந்த வகையில் தனது டிஆர்பியை உயர்த்திக் கொள்வதற்காக விஜய் தொலைக்காட்சி இதில் சர்ச்சை நடிகையை களமிறக்கவுள்ளதாகப் பேச்சு அடிபட்டுள்ளது. ஆம்... டோலிவுட், கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் சிலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஶ்ரீரெட்டி தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளராம். எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதால் இதை செய்தியை நம்பலாமா? வேண்டாமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.