• February
    28
    Friday

Main Area

Main



அஜித் முதல் ஆர்யாவரை தோசைக்கு தேடி வரும் ‘ ஸ்ரீ ஐயப்பா தோசைக்கடை ‘..!

ayyappan dosai kadai
ayyappan dosai kadai

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள பாண்டிய வெள்ளாளர் தெருவில் இருக்கிறது இந்த ஸ்ரீ அய்யப்பா தோசைக்கடை. 1970-களில் துவங்கப்பட்ட இந்தக்கடையை இரண்டாவது தலைமுறையில் வந்த கார்த்திகேயன் இப்போது நடத்திக்கொண்டு இருக்கிறார்.

ayyappan-dosai-kadai-02

அன்று முதல் இன்றுவரை இங்கே ஒன்லி தோசை பாலிசியை கடைபிடித்து வருகிறார்கள். தோசை என்றால்,வழக்கமான சாதா,ஸ்பெஷல், ரோஸ்ட், ரவா,மசாலதானே உங்களுக்குத் தெரியும் இங்கே போய்  பாருங்கள், சென்னா மசாலா தோசை முதல் சாக்லெட் தோசை வரை 70 வகையான தோசைகள் தருகிறார்கள்.

மசால் தோசை வகைகள் மட்டும் காளான், பனீர், சென்னா, உருளை, தக்காளி, பூண்டு, காலிஃபிளவர், பட்டர் பீன்ஸ் என்று பத்துக்கும் மேற்பட்ட வகைகள்,ரவா என்றால் பிளைன் ரவா,ஆணியன்,பொடி என்று ஒரு 7 வகை தருகிறார்கள். பொடி தோசை என்றால்,மிளகாய்ப் பொடி, எள்ளு, கரிவேப்பிலை என்று ஐந்தாறு பொடிதோசைகள்.

இனிப்பிலும் சாக்லெட் தோசை, ஸ்ட்ராபெரி தோசை, பட்டர்ஸ்காட்ச் தோசை என்று வெரைட்டி காட்டுகிறார்கள். சீஸிலும் அப்படியே,இவர்களின் பட்டர் சீஸ்தோசையும்,கோவா தோசையும் செம ஹிட்!

ayyappan-dosai-kadai-03

இன்னும் அடைதோசை, செட் தோசை என்று வகை வகையாக தோசைகள். அனைத்தும் சைவம்.இந்த  ஐய்யப்பன் தோசைக்கடையின் நட்சத்திர கஸ்டமர்கள் லிஸ்ட்டே தோசை லிஸ்ட்டை விட நீளமாக இருக்கிறது. இளையராஜா, மிர்ச்சி சிவா, ஆர்யா, லிங்குசாமி என்று அடுக்கிக் கொண்டே போகிறார் கார்த்திகேயன். அதுவும் அஜித் இவர் சுட்டுத்தந்த தோசையை சாப்பிட்டு விட்டு கூப்பிட்டு பாராட்டி, இன்னொரு தோசை கேட்டு வாங்கிச் சாப்பிட்டாராம்.

ஆகவே அடுத்த மதுரை விசிட்டில் ஐயப்பன் தோசையையும் சேர்த்துக்கொள்ள மறக்காதீர்கள்.

2018 TopTamilNews. All rights reserved.