• August
    24
    Saturday

Main Area

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை!

நாற்பது ஆண்டுகள் ஜலவாசத்திற்குப் பிறகு காட்சியருள எழுந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். முதல்நாள் அத்திவரதரை தரிசனம் செய்யும் மோடி, காஞ்சீபுரத்திலேயே தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Aththivaradhar

இதுநாள்வரை லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து தரிசனம் பெற்றுள்ளனர். முன்னதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தரிசனம் செய்தனர். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர். தரிசனத்திற்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்கு முன்னதாக அத்திவரதரை  தண்ணீருக்குள் போட்டது நேருவின் சதி என பிரதமர் சொல்லமாட்டார் என நம்புவோம்.
 

gunaseelan Mon, 07/08/2019 - 13:04
Aththivaradhar darshan once in 40 years PM Modi to visit Kancheepuram PM Modi ஆன்மிக டூர் தமிழகம் இந்தியா

English Title

PM Modi to visit Kancheepuram for darshan

News Order

0

Ticker

1 பக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி!

அத்தி பூத்தாற்போல் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை, சென்னைவாசிகள் சுலபமாக சென்று தரிசனம் செய்வதற்காக, நாளை முதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுவரும் அத்திவரதர் வைபவத்தை, கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் த‌ரிசனம் செய்துள்ளனர். நாள்தோறும் பெருகிவரும் பக்தர்கள் வசதிக்காக, 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Aththivarathar

முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை அதிகாலை 04.15 மணிக்கு புறப்பட்டு காலை 06.05 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 04.25 மணிக்கு புறப்பட்டு காலை 07.15 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணி, மதியம் 12.00 மணி, பிற்பகல் 3.10 மணி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை செங்கல்பட்டு, தாம்பரம், கடற்கரைக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

gunaseelan Fri, 07/05/2019 - 12:39
Aththivarathar Vaibhav southern railways Special trains to Kancheepuram Kancheepuram Station ஆன்மிக டூர் ஆன்மிகம் தமிழகம்

English Title

Southern Railways operate special trains to Kanchipuram

News Order

7

Ticker

1 பாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ தொலைவில் இருக்கிறது திருவேட்களம். இங்கு வேடன் வடிவில் இருந்த சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் போர் நிகழ்ந்ததால் இந்தத் தலத்துக்கு மகாயுத்த களம் என்றொரு பெயரும் உண்டு.மூங்கில்வனம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.அதெல்லாம் பழங்காலப் பெயர்கள்.

இப்போது இந்தப் பகுதி,அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் பரப்பளவு ஒரு ஏக்கர்.கோவிலில் கிழக்கு நோக்கி இருக்கும் சுயம்புலிங்கமாக பாசுபதேசுவரர் இருக்கிறார்.இறைவு நல்ல நாயகி.கோவிலின் எதிரில் உள்ள குளம்,கிருபா கடாட்ஷ தீர்த்தம்.தல மரம் மூங்கில்.இதனாலேயே இத்தலத்துக்கு மூங்கில்வனம் என்கிற பெயரேற்பட்டது.

thiruvetkalam

அந்த மூங்கில் வனத்தில் பாசுபதா அஸ்த்திரம் என்கிற அஸ்த்திரம் வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான்.அப்போது துரியோதனனால் ஏவப்பட்ட முகாசுரன் என்பவன் கொடூரமான பன்றி உருக்கொண்டு இந்தகாட்டுக்குள் வருகிறான்.அவனால் அர்ஜுனனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்று நினைத்த சிவன் வேடன் உருவம் கொண்டு காட்டுக்குள் வந்து முகாசுரனை தாக்குகிறார்.

thiruvetkalam

மறுபுறம் அர்ஜுனனும் அந்த பன்றி உருவில் இருக்கும் முகாசுரனைத் தாக்குகிறான்.முகாசுரன் உயிருக்கு பயந்து ஓடி அங்கே தஞ்சமடைகிறான். அங்கே வரும் அர்ஜுனனும் வேடன் உருக்கொண்ட சிவனும் அந்த பன்றி தனக்குத்தான் சொந்தம் என்று வாக்குவாதம் செய்கிறார்கள்.அதை தொடர்ந்து இருவரும் யுத்தம் செய்கிறார்கள்.அப்போதுதான் அர்ஜுனனுக்கு தான் போர் செய்வது இறைவனிடம் எனத் தெரிகிறது.

thiruvetkalam

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வணங்கி நிற்கிறான்.இறைவன் அவனுக்கு பாசுபதாஸ்வர அஸ்த்திரத்தை வழங்குகிறார்.இதை சித்தரிக்கும் விதமாகதிருவேட்களம் கோவிலின் முன்மண்டபத்தில் இறைவன் வேடுவன் உருவில் தேவியுடன் நாய்கள் தொடர நடந்து போகும் சிற்பமும்,அர்ஜுனனுடன் போரிடும் சிற்பமும் அமைத்திருக்கிறார்கள்.

thiruvetkalam

வேடுவ வடிவில் தேவியுடன் கையில் பாசுபதாஸ்த்திரம் ஏந்தி நிற்கும் உற்சவர் சிலையும் இருக்கிறது.அர்ஜுனனுக்கும் இங்கே உற்சவ விக்கிரகம் உண்டு. பினாகம்,சாரங்கம்,காண்டீபம் என்கிற மூன்று விற்களும் உருவானது இந்தத் தலத்தில்தான். திருஞானசம்பந்தர் இங்கே தங்கி இருந்து, நாள் தோறு தில்லைக்குச் சென்று சிவனை வழிபட்டதாக பெரிய புராணம் சொல்கிறது.திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரும் இத்தலத்தை பாடி இருக்கிறார்கள்.தேவாரப் பதிகம்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2 வது தலம்.

manikkodimohan Mon, 03/04/2019 - 10:12
CHIDAMBARAM CHIDAMBARAM RAGASIYAM spiritual Thiruvetkulam chidambaram temple facts திருவேட்களம் சுற்றுலா ஆன்மிக டூர் ஆன்மிகம்

English Title

shiva purana : chidambaram thiruvetkalam temple history

News Order

0

Ticker

0 பாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்

சைவர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் தான்.அதன் ஆதி பெயர் தில்லை.சிதம்பரம் என்பது பிற்காலத்தில் தோன்றிய பெயர்.தில்லை என்பது ஒரு மரம்.அதுதான் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தல விருட்சம்.தில்லை மரங்கள் இப்போது சிதம்பரத்தில் இல்லை.தில்லை மரங்களை பார்க்க நீங்கள் அருகிலுள்ள பிச்சாவரத்திற்கு போக வேண்டும்.சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலுக்கு எவ்வளவு மரங்கள் தப்பியிருக்கிறது என்பதை அங்கு போனால்தான் தெரியும்!

pichavaram

அங்கு உப்பங்களிகளின் கரையில் அமைந்திருக்கும் அலையாத்திக் காடுகளைப் பார்த்து இருக்கிறீர்களா?.அலையாத்திக் காடுகளில் உள்ள மரங்களின் பெயர் சுரபுன்னை.இந்தச் சுரபுன்னையின் இன்னொரு பெயர்தான் தில்லை.இந்த தில்லை மரங்கள் சூழ்ந்த ஊருக்கும்,அதனுள் ஆடவல்லான் கொண்ட கோவிலுக்கும் அதுவே பேராயிற்று!

natrajar temple

சைவக்குறவர் நால்வர் பாடிய கோவில்களையே பாடல் பெற்ற தலங்கள் என்கிறோம். அவற்றில் முதற்கோவில் சிதம்பரம்.கடலூரில் இருந்து தெற்கே 44 கி.மீட்டர் தொலைவிலிருக்கிறது.கோவிலின் பரப்பளவு 40 ஏக்கர்.இன்றைய சதுர அடிக்கணக்கில் சொன்னால்,பதினாறு லட்சம் சதுர அடி.நான்குபுறமும் 135 அடி உயரமுள்ள 23 கலசங்கள் கொண்ட ஏழுநிலை ராஜ கோபுரங்களுடனும்,நான்கு பிரகாரங்களுடனும் அமைந்திருக்கிறது தில்லையம்பலம்.

natrajar temple

தனிச்சன்னிதியான் பொன்னம்பலத்தில் சபாநாயகரான நடராஜன் இருக்கிறார்.தீர்த்தங்கள் சிவகங்கை, குய்ய,புலிமடு,வியாக்ரபாத, ஆனந்த,நாக, பிரம்ம,சிவப்பிரிய,பரமானந்த , கூப, மற்றும் திருப்பாற்கடல் என்பவை.உட்பிரகாரங்களில் பொல்லாப் பிள்ளையார்,முருகன் ,கால பைரவர்,ஸ்படிகலிங்கம்,மரகதலிங்கம்,சந்திரேசர்,துர்கை,கோவிந்தராசர் மற்றும் நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன.

வியாக்கரபாதர்,பதஞ்சலி,உபமனிய,வியாசர்,செளனகர்,சுகர்,சைமினி,சூதர் ஆகிய முனிவர்கள் பூஜித்த தலம் இது.இந்தத்தலத்தில் கனகசபை, சிற்சபை, திருச்சபை, இராசசபை,தேவசபை ஆகிய ஐந்து சபைகளும் ,ஐந்து பெருமன்றங்களில் ஒன்றான பொற்சபை,ஐம்பெரும் பொருட்களில் ஒன்றான வானலிங்கம் ஆகியவை அமைந்த தலம் இது.

natrajar temple

நடராஜப்பெருமான் இங்கு ஆனந்ததாண்டவம் செய்கிறார்.இறைவன் இங்கு படைத்தல்,காத்தல், அழித்தல்,மறைத்தல்,அருளல் என்று ஐந்தொழில்களையும் நிகழ்த்தி இருக்கிறார்.சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் ஒரு சிறு வாயில் இருக்கிறது. இதனுள் திருவாசியும் தங்கத்தால் ஆன வில்வ இலையும் மட்டுமே கானப்படும்.இதற்கு ஆரத்தி காட்டப்படும். இதுதான் சிதம்பர ரகசியம். 

சிவன் இங்கே ஆகாய வடிவில் இருப்பதாக பொருள்.தேவாரப் பதிகம் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இதுவே முதன்மையானது.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பதிகம் பெற்ற கோவில் இது.மாணிக்க வாசகர்,திருநீலகண்ட நாயனார், நந்தனார்,உமாபதி சிவாச்சாரியார் ஆகியோர் வீடுபேறுற்ற தலம் தில்லை.

natrajar temple

இந்தக் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அறங்கேற்றப்பட்டது.108 வைணவ திவ்விய தேசங்களில் இந்தக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள கோவிந்தராசர் சன்னிதியும் ஒன்று.ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலை கட்டும்வரை சோழ மன்னர்கள் வழிபட்டது இந்தக் கோவிலைத்தான்.காலகாலமாக சோழ மன்னர்கள் முடிசூட்டிக்கொள்வதும் இந்த பொன்னம்பலத்தில்தான்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்துதான் நம்ம்பியாண்டார் நம்பி நால்வர் பாடிய தேவாரங்களையும் மீட்டெடுத்தார் என்பது இந்தக்கோவிலின் இன்னொரு சிறப்பு.இங்கே யுகம் யுகமாக ஆடிக்கொண்டிருக்கும் நடராஜனின் ஆனந்த தாண்டவத்தில்தான் பிரபஞ்ச ரகசியம் அடங்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Aarthi Fri, 03/01/2019 - 11:11
natrajar temple chidambaram chidambaram ragasiyam spiritual சிதம்பரம் நடராஜன் சுற்றுலா ஆன்மிக டூர் ஆன்மிகம்

English Title

chidambaram Thillai Nataraja Temple history-1

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.