• June
    25
    Tuesday

Main Area

தேர்வுகளில் வெற்றியடைய செய்யும் தூங்காபுளி மரம்!

இராமாவதாரம் முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே மிச்சம் இருந்தது. ராமரை ரகசியமாக சந்தித்து பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லஷ்மணனை அழைத்து நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்று, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே காவல் காத்து வந்தான் லஷ்மணன். அந்த சமயத்தில் துர்வாச முனிவர் ராமரை தரிசிக்க வந்தார். 

tamarind

லஷ்மணன் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தான். ஏற்கெனவே கோபத்திற்கு பேர் போன துர்வாசர், ‘என்னை இப்பொழுது உள்ளே செல்ல நீ அனுமதிக்காவிட்டால், அயோத்தியே அழிந்து போக சபித்து விடுவேன்’ என்று கூச்சலிட்டார்.
அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லஷ்மணனும் மகரிஷி துர்வாசருக்கு வழிவிட்டான். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லஷ்மணன் மீது ராமருக்கு கோபம் வந்து, ’
‘நீ மரமாகப் போகக் கடவது’ என்று சபித்தார். அதைக் கேட்டதும் லஷ்மணன் கண்ணீருடன், ‘அண்ணா.. தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை செய்யாமல் எப்படி வாழ்வேன்?’ என்று கதறினான்.

tamarind

‘லஷ்மணா! எல்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டுகள் அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது! மரமாக மாறும் நீயே எனக்கு நிழல்தரும் பேறு பெறுவாய்’ என்றருளினார். அதன்படியே திருநெல்வேலி அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லஷ்மணன் புளியமரமாக நின்று சேவை செய்தார்! இந்த மரத்தை இப்போதும் தூங்காப்புளி என்று பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 
சரி, அதென்ன தூங்காபுளி?
அதாவது, இந்த மரத்தினுடைய இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. மரமாக மாறிய லஷ்மணன் எப்பொழுதும் தன் கண்களை இமைக்காமல் ராமரை பாதுகாப்பதாக ஐதீகம்.  தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற மாணவர்கள் தேர்வுக்குச் செல்வதற்கு முன்னர், இம்மரத்தை சுற்றி வருகிறார்கள். 
பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், குரூப் 4, பேங்க், ரயில்வெ என்று போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக இந்த செய்தியை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறோம்.

admin Mon, 06/24/2019 - 12:17
tamarind tree examination தூங்காபுளி மரம் ஆன்மிகம்

English Title

tamarind tree will help us to pass in examination

News Order

0

Ticker

0 கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுத கிருஷ்ணர்..!

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறந்து கிடந்ததை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கிறான் அர்ஜுனன்.அதைப்  பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும், கதறி கண்ணீர் விட்டு அழுதான். கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன், கண்ணனை இறுக பற்றி  கொண்டு, ‘கண்ணா! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ ?’ என்று கேட்டான் .

‘இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை. உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுகிறேன்’ என்றான் கண்ணன்.‘கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம் எதுவும் கிடையாது. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது’ என்றான் அர்ஜுனன்.
‘உறவு, பற்று, பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா’ என்று கூறினார் கண்ணன்.
‘அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச பந்தம் அவர்களை விட்டு போகாது’
‘அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம்  செல்லலாம். அங்கே தான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது’ என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன். bharatayudha

ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்க்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டு கொண்ட அர்ஜுனன், ‘என் மகனே அபிமன்யு!’ என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான். அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா, ‘அய்யா யார் நீங்கள்? என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள்’ என்றது அபிமன்யுவின் ஆன்மா. 
அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம் பேச ஆரம்பித்தார் கண்ணன். 

‘பார்த்தாயா? உறவு, பாசம், பந்தம், உணர்வு, கோபம், அன்பு, காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான். உடலை விட்டு உயிர் போய்விட்டால்.. ஏதும் அற்ற உடலுக்கும் உணர்வு இல்லை அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை. நீ  அழவேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு. உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு. ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல. பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்துகொள்.  bharatayudha

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே! செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு அதுவே வாழ்வின் அர்த்தமாகும்’ என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்

admin Sun, 06/23/2019 - 16:08
bharatayudha god krishnan geethopadesam bharatayudha ஆன்மிகம்

English Title

Lord Krishna Felt Ashamed for Lecturing Geeta to Arjuna

News Order

0

Ticker

1 எந்த விநாயகரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அம்மாவையும், அப்பாவையும் அன்போடு வழிபட்ட பிள்ளை ஆதலால் பிள்ளையார். வணக்கத்திற்குரிய முதல் கடவுளாக விநாயகர் இருந்தாலும், ரொம்பவே எளிமையானவர். அதனால் தான் சுண்டலும், அருகம்புல்லும் வெச்சு வழிபட்டாலே வரங்களை அள்ளித் தருபவராக இருக்கிறார். 


எல்லா கடவுள்களிலும் முதன்மையானவர் . இவர் எளிமையானவர். அதனால் தான் எளிதாக கிடைக்கும் அருகம்புல்லை வைத்து வழிபட்டாலே அனைத்து வரங்களையும் அள்ளித் தருபவர். விநாயகரை எந்த ரூபத்திலும் எந்த பொருளிலும்  வழிபடலாம். மனசு மட்டும் தான் வேணும். மண், கல், மஞ்சள், வெல்லம், உப்பு.. இவ்வளவு ஏன் பசுவின் சாணத்திலும் கூட விநாயகரைச் செய்து வழிபடலாம். நீங்க மனசுல விநாயகரை நினைச்சு எந்த பொருளைப் பிடிச்சு வெச்சாலும் அது பிள்ளையார் தான். 

அப்படி எந்தெந்த பிள்ளையாரை வழிபட்டால் நமக்கு என்ன மாதிரியான பலன்களைத் தருவார் என்று பார்க்கலாம்.


1மண்ணினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால்  ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
2.கரும்கல்லினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் எடுத்த காரியங்கள் யாவிலும் வெற்றி கிட்டும்.
3.உப்பினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
4. வெல்லத்தினால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் உடம்பில் உள்ள கொப்புளங்கள் மறையும்.
5. குங்குமத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
6.விபூதியால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் வெப்பத்தால் வருகிற நோய்கள் நீங்கும்.
7.மஞ்சளால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். 
8.பசுஞ்சாணத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால், தோஷங்கள் நீங்கி விரைவில் சுபநிகழ்ச்சிகள் வீட்டில் அரங்கேறும்.
9,வெள்ளெருக்கில் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் பில்லி சூன்யம் அகலும்.
10,வாழைப்பழத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கும். 
11. சந்தனத்தால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் நன்மக்கட்பேறு உண்டாகும்.
12. சர்க்கரையால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபட்டால் வீட்டில் இனிமையான தருணங்கள் மேலோங்கும்.


நம் விருப்பத்திற்கேற்ப பிள்ளையாரை, விரும்பிய பொருளில், நாம் விரும்பிய வடிவத்தில் வைத்து வழிபட வேண்டியது தான். ஆனந்த வாழ்வுக்கு ஆனை முகத்தானை வழிபடுங்கள்!

Aarthi Sat, 06/22/2019 - 15:59
lord ganesha god பிள்ளையார் ஆன்மிகம்

English Title

DO U KNOW WHICH GANESH WILL HELP YOU MORE

News Order

0

Ticker

0 கோவில்களில் தேங்காய் உடைத்து ஏன்வழிப்படுகிறோம்?

கோவில்களில் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம் ஆகும். நம் முன்னோர்கள் தொடங்கி இன்று வரையிலும் அந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக மட்டுமே தேங்காய் உடைப்பதை தொன்றுதொட்டு செய்து வருவதாக பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அது கிடையாது. கோவில்களில் தேங்காய் உடைக்கப்படுவதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

coconut

தேங்காயின் மேல் பகுதியில் வலிமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்பு போன்ற பகுதியும், அதைத் தொடர்ந்து தேங்காயின் உட்புறம் நீரும்  உள்ளது. இதில் உருண்டையான புறஓடு என்பது பிரபஞ்சத்தை பிரதிபலிக்கிறது. இரண்டுமே கோள வடிவம் கொண்டவை ஆகும். எனவே இது  உலக மாயையை குறிக்கிறது. உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கிறது. பரமாத்மாவால் விளையும் பரமானந்த  அமிர்தத்தை இளநீர்  பிரதிபலிக்கிறது. 
 அதாவது மாயை காரணமாக பரமாத்மாவை உணராமல், பரமானந்த பிராப்தியையும் பெறாமல் ஜீவாத்மா நிற்கின்றது. அதேபோல வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறைக்கிறது. ஈஸ்வர சந்நிதியில் மாயையை அகற்றி, தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர்  அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது உணர்த்துகிறது. இவ்வாறான உட்கருத்துகள் பல இருப்பதால்தான்.இறை வழிபாட்டில் தேங்காயை முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.
இதனால் தான் இறைவழிபாட்டில், மறக்காமல் தேங்காய் உடைத்து வழிபடுகிறோம்.

newsdesk Fri, 06/21/2019 - 19:16
temple coconut  தேங்காய் ஆன்மிகம்

English Title

why we are breaking coconut in temple

News Order

0

Ticker

0 சனிக்கிழமைகளில் மறக்காம இதைச் செய்ங்க... அப்புறம் பாருங்க உங்க முன்னேற்றத்தை!

நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல்  கெடுப்பவருமில்லை என்பார்கள். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனிபகவான் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மகாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு ஏற்படுத்தும் காலங்களாகும்.

sanibagavan

கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் "சனி" தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும் ஆட்டி வைப்பவர் என்று பொருள். ஆனால் தன்னை யார் சிரத்தையோடு வழிபடுகிறார்களோ அவருக்கு அல்லது அவர்களுக்கு, கருணையை அள்ளித்  தரும் வள்ளல் இவர்தான். 
ஜோதிட சஸ்திரப்படி சனிபகவான் ஆட்டிப்படைப்பார் என்ற கருத்தானது தவறானதாகும். ஒருவர் பிறந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொறுத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத்தரும்.

sanibagavan

நமக்கிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, செல்வம் சேர, குடும்பத்தில் குதூகலம் நிரந்தரமாய் குடியிருக்க சில நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பலன்களை எதிர்பார்க்காமல், நம்பிக்கையுடன் சில விஷயங்களை ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்து வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதை நீங்களே உணர்வீர்கள். 
ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மறக்காமல், காலை குளித்து முடித்து, சாப்பிட அமர்வதற்கு முன்னால், காகத்திற்கு உங்கள் கையால் ஏதாவது உணவை வைத்து விட்டு, காகம் சாப்பிட்ட பின்பு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். 
தவறாமல் எல்லா சனிக்கிழமையும், பூஜை செய்து ஒரு எலுமிச்சை பழத்தை கண்ணாடி டம்ப்ளரில் வைத்து வந்தால் நம் வீடு மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மீதான கெட்ட சக்திகள் விட்டு விலகி செல்லும். இதே போன்று வாராவாரம் சனிக்கிழமையன்று எலுமிச்சை பழத்தை மாற்றி வைக்க வேண்டும்.

sanibagavan

மறக்காமல் சனிக்கிழமையன்று மாலை நேரத்தில் சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் ஊற்றி எளதீபம் ஏற்றி வழிபட வேண்டும். மறக்காதீர்கள்... எள் தீபத்தை மாலை நேரத்தில் தான் ஏற்றி வழிபட வேண்டும். மாலையில் வேலை இருக்கிறது என்று காலையிலேயே ஏற்றி வழிபட்டால் முழு பலனும் கிடைக்காது.

newsdesk Fri, 06/21/2019 - 19:03
sanibagavan Prayer சனிபகவான் ஆன்மிகம்

English Title

saturday don't forgot to do this..then see your growth

News Order

0

Ticker

0 சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி!

இன்று 20-6-2019(வியாழக்கிழமை) சங்கடஹர சதுர்த்தி

vinayagar

 

பௌர்ணமியை அடுத்த நான்காவது நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். ’சங்கட’ எனும் சொல்லுக்கு ’துன்பம்’ எனப் பொருள். ’ஹர ‘ என்னும் சொல்லுக்கு ‘அழித்தல் ‘எனப் பொருள். அதாவது துன்பங்களை அழிக்கும் நாளே சங்கடஹர சதுர்த்தி. முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த நாள்  சங்கடஹர சதுர்த்தி. அங்காரகன்(செவ்வாய்) சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தே நவக்கிரகங்களுள் ஒருவராக இருக்கும் பேறு பெற்றார். பஞ்ச பாண்டவர்களும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து விநாயகர் அருள் பெற்று மகாபாரதப் போரில் வென்றார்கள். நினைத்ததை எல்லாம் தரக் கூடிய இந்த விரதத்தை எவ்வாறு கடைப்பிடிக்கலாம்?


விரதம் அனுஷ்டிக்கும் முறை:

vinayagar


காலையில் எழுந்து குளித்து வீட்டில் உள்ள விநாயகருக்கு அருகம்புல் வைத்து விளக்கேற்றி அர்ச்சனை செய்து விரதத்தை துவங்க வேண்டும். மாலை வரை  நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாலை வேளையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பிள்ளையாரை தரிசித்து, வேண்டுதல் நிறைவேறுமாறு பிரார்த்தனை செய்து வானில் சந்திர தரிசனம் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று ஆகாரம் எடுத்துக் கொள்ளலாம். நிறைய பேர் கோயிலுக்குச் சென்று இறைவனை மட்டும் தரிசித்து வருவார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் பொழுது, தரிசனம் முடித்து, வானில் சந்திர தரிசனத்தையும் பார்க்க வேண்டும்.


விரத பலன்கள்:

vinayakar


சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.  நமது எல்லா விதமான சங்கடங்களையும் பறந்தோட வைப்பார் விநாயகர்.ஆரோக்கியமான வாழ்க்கை, நீண்ட ஆயுள், குழந்தை வரம் , தொழில் முன்னேற்றம், நன்மதிப்பு, அறிவு, பெருமை, புகழ் அனைத்தையும் அள்ளி கொடுப்பார். அதிலும் குறிப்பாக  சனி தசை நடப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்க்கொண்டால் சங்கடங்களில் இருந்து விடுவித்து நல்ல பலன்களைத் தருவார். நினைத்ததை எல்லாம் நிறைவேற்றித்தரும் இந்த சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை நாமும் அனுஷ்டித்து சகல நன்மைகளையும் அடையலாம்.

manikkodimohan Thu, 06/20/2019 - 07:10
Lord Vinayakar vinayakar temple Sangadahara Sathurthi Ganesh Worship விநாயகர் ஆன்மிகம்

English Title

how to perform sankatahara chaturthi pooja and fast

News Order

1

Ticker

0 என்ன வேண்டுதலுக்கு எத்தனை முறை ஆலய பிராகாரத்தை வலம் வர வேண்டும்?

ஆலயங்களுக்குச் செல்லும் போது, கருவறையில் உள்ள கடவுளை வணங்கிய பின்னர், பிராகாரத்தை சுற்றி வருவது வழக்கமானது தான். ஆனால், எல்லோரும் ஒரு முறை தானே சுற்றி வருகிறார்கள். அதானல் நாமும் ஒரு முறை வலம் வந்தால் போதும் என்று நினைத்து சுற்றி வருதல் கூடாது. ஆலயங்களில், பிராகாரத்தை எத்தனை முறை சுற்றி வந்தால் என்ன மாதிரியான பலன்கள் என்கிற  முழு விவரங்களையும் நாம் சரியாகத் தெரிந்துக் கொண்டு சுற்றி வருவது முக்கியம்.  

temple

டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக கோயில் பிராகாரத்தை சுற்றி வருவதன் பலன்களைப் பார்க்கலாம். 
பொதுவாக ஆலயத்தில் பிரகாரத்தை ஒற்றைப் படை எண்ணிக்கையில் தான் சுற்றி வர வேண்டும். அதே போல், இடமிருந்து வலமாகத் தான் சுற்றி வர வேண்டும். சிலர் ஸ்பெஷல் தரிசனம் என்கிறப் பெயரில் குறுக்கு வழியில் இறைவனை தரிசித்து விட்டு, வலமிருந்து இடமாக பாதி தூரம் மட்டும் வந்து, கோயிலை விட்டு வெளியேறி வருவார்கள். இதெல்லாம் தவறு.
ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை சுற்றி வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் நினைத்த காரியம் ஜெயமாகும்.

temple

ஒன்பது முறை வலம் வருவதால் சத்ரு நாசம், எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். 
பதினொரு முறை சுற்றி வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் கைகூடும். 
பதினைந்து முறை வலம் வந்தால் தனப்ராப்தி உண்டாகும்.
பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும். 
பத்தொன்பது முறை சுற்றி வலம் வந்தால் ரோகம் நிவர்த்தியாகும்.
இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை சுற்றினால் சுக சௌகர்யத்துடன் வாழ்வு கிட்டும்.
நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
இருநூற்று எட்டு முறை சுற்றினால் யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.
யாருக்கு என்ன தேவையோ அவர்கள் தான் வலம் வர வேண்டும். பிள்ளைகளுக்காக தாய் செய்கிற பிரார்த்தனைகள் பலிக்கும்.

newsdesk Tue, 06/18/2019 - 11:49
temple god prayer கடவுள் ஆன்மிகம்

English Title

what should we must pray to god how many round we have to do in temple

News Order

0

Ticker

0 கடவுள்  எங்கே  இருக்கிறார்

அது ஒரு ஆன்மிக தலம் . மலையின் உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள். ரொம்ப விசேஷமான கோயில் அது. அந்த மலை உச்சிக்குச் சென்று கடவுளை தரிசனம் செய்தால், நம் வாழ்க்கையில் எல்லா சுகங்களும் கிடைக்கும் என்றார்கள்.
கடவுளைப் பார்க்க ஒரு நாள் நானும் ஆர்வமுடன் மலை உச்சிக்குச் செல்ல பயணத்தை ஆரம்பித்தேன். கடவுளைப் பார்க்க வெறுங்கையோடு செல்லாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்.

temple

குசேலனின் அவல் போல் இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்.  அருகே செல்ல செல்ல, மலையடிவாரத்திலேயே சிறிது நேரம் மலைத்து நின்றுக் கொண்டிருந்தேன். ரொம்ப உயரம் போலவே... என்னால் ஏற முடியுமா என்கிற கலக்கம் தான் முதலில் தோன்றியது. மலையைச் சுற்றிலும் நிறைய வழிகள் இருந்தது. மேலே  மலையின் உச்சிக்குச் செல்ல நிறைய வழிகளும் இருந்தது. அமைதியான பாதை ஒன்று...ஆழ்ந்த தியானம், மந்திர வழி, தந்திர வழி, ஸ்பெஷல் கட்டண வழி, கடினமான வழி, குறுக்கு வழி, சிபாரிசு வழி, ஸ்பெஷல் தரிசனம் என்று கடவுளைக் காண்பதற்கு நிறைய வழிகள் இருந்தது.
எல்லா வழிகளிலுமே போர்டுகள் மாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள் சிலர். சில வழிகாட்டிகள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் சிலரோ, 'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...' என்று ஒதுக்கி விட்டார்கள். 'நான் கூட்டிச் செல்கிறேன்... கட்டணம் தேவையில்லை. ஆனால், என் வழியி்ல் மட்டும் தான் வர வேண்டும்’ என்று  பிரசங்கங்களும் சில இடங்களில் இருந்தது. மேலும் சிலர் என் கையைப் பிடித்து இழுத்துச் செல்லவும் துவங்கினார்கள். ‘உனக்குப் பதில் நான் மேலே ஏறிச் செல்கிறேன். நீ பணம் மட்டும் செலுத்து. புண்ணியம் உனக்கு’ என்றான் இன்னொரு அதிமேதாவி.

god

'கடவுளைப் பார்க்கணும்..  அவ்வளவு தானே? இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்.. அது போதும்!’ என்றான் இன்னொருவன்.  ‘அதெல்லாம் உன்னால் மேலே ஏற முடியாது. எங்களால் மட்டும் தான் ஏறமுடியும்...' என்று ஆணவத்துடன் சில பேர், அதிகாரத்துடன் சிலர் என்று கடவுள் மீது இன்னும் வன்மத்தைக் கூட்டினார்கள். 
'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை.. ஏறினால் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். அது ஒரு வழிப்பாதை. ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது. அப்படியே போக வேண்டியதுதான்' என்று பயமுறுத்த ஆரம்பித்தார்கள் இன்னும் சிலர்.
'சாமியாவது பூதமாவது அது வெறும் கல். அங்கே ஒன்றும் இல்லை. வெட்டி வேலை. போய் பிழைப்பைப் பார்' என்று மலையேறுவதற்கான பாதையை அடைத்து வைத்துப் பகுத்தறிவு பேசினர் சிலர்.
குழம்பி நின்ற என்னிடம் கை நீட்டியது ஒரு பசித்த வயிறு. கடவுளுக்கென்று கொண்டு வந்ததை அந்தக் கையில் வைத்தேன்.
'மவராசியா இரு...' என்று வாழ்த்திய முகத்தைப் பார்த்தேன்.
நன்றியுடன் எனை நோக்கிய அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து என்னைப் பார்த்து புன்னகைத்தார் கடவுள்!
'இங்கென்ன செய்கிறீர்கள். உங்களைப் பார்க்கத் தானே அவ்வளவு பேரும் மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள்?’
"நான் இங்கேதானே இருக்கிறேன்"
'அப்போ அங்கிருப்பது யார்..?' மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்.
"ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்கள் அங்கே பார்ப்பதற்காக சிரமப்பட்டு வருகிறார்கள்” என்றார் கடவுள்.  

god


‘என் தரிசனத்தைப் பெற கண்கள் தேவையில்லை. மனது தான் வேண்டும்.  சிரமப்பட்டு மலையேறி வந்தால் தான் நான் பலன் தருவேன் என்பதில்லை. இருக்கும் இடத்தில் இருந்தப்படியே என்னை தரிசிக்கலாம்... அதற்கான மனசு தான் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை’ என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கடவுள்.
கடவுளைக் கண்ட மகிழ்ச்சியில் வீடு திரும்பினேன்.

newsdesk Mon, 06/17/2019 - 18:16
god Prayer கடவுள் ஆன்மிகம்

English Title

where is god

News Order

0

Ticker

0 இன்று ஆனி பௌர்ணமி... மாங்கல்ய பாக்கியம், காதலில் வெற்றி, கல்வியில் முன்னேற்றம்னு எல்லா பலன்களுக்குமான பூஜை

சூரியனோட வடக்கு திசை நோக்கிய பயணத்தின் இறுதி மாசம் ஆனி மாசம். தமிழ் வருஷத்தோட கணிப்புபடி சித்திரை, வைகாசி அடுத்து மூன்றாவது மாசமாக ஆனி மாசம் வருது. ஆனி மாசத்துல வர்ற ரொம்ப விசேஷமான நாள் தான் ஆனி பௌர்ணமி. இந்த ஆனி பௌர்ணமி நாள்ல நாம செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன... அதனால நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக பிரத்யேகமா சொல்றேன்.

moon

இந்த வருஷம் ஆனி மாசப் பௌர்ணமி கேட்டை நட்சத்திர நாள்ல வருது.  இன்னைக்கு காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலைப் போற்றும் விதமா வருஷந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகுந்த பலன்களைத் தரும்.
இன்னைக்கு முன்னிரவு வேளையில் வானத்தில் தெரியும் சந்திரனை தரிசித்து வழிபடுறது ரொம்பவே விசேஷமானது.  இந்த ஆனி பௌர்ணமியில் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், சோளிங்கர், பழனி போன்ற மலை சார்ந்த கோயில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டு கிரிவலம் வரலாம். எக்கசெக்க புண்ணியங்கள் கிடைக்கும். 

god

இன்று கோயில்களில் பக்தர்களுக்கு பழச்சாறு போன்றவைகளைத் தானமாக தரலாம். இன்று விரதமிருந்து, பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். மாங்கல்ய பாக்கியம் ஏற்படும். கணவர்களின் ஆயுள் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உருவாகும். நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது

newsdesk Mon, 06/17/2019 - 14:47
full moon day god worship ஆனி பௌர்ணமி ஆன்மிகம்

English Title

Today is the full moon ... Blessing of Mangalya, Victory in love, Pooja for all

News Order

0

Ticker

0 கணபதியை வணங்கும் போது ஏன் நம் தலையின் இரு பக்கங்களிலும் கொட்டிக் கொள்கிறோம்?

நாம் புதிதாக எந்த ஒரு வேலையைத் துவங்கினாலும், முதன் முதலில் விநாயகர் வழிபாடு செய்கிறோம். அப்படிச் செய்து விட்டு துவங்குவது தான் முறையும் கூட. கோயில்களில் வாசல் பார்த்த மாதிரி விநாயகர் அமர்ந்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். குலதெய்வ வழிபாடோ, இஷ்ட தெய்வ வழிபாடோ... முதல்ல விநாயகரை வழிபட்டு விட்டு தான் பிற தெய்வங்களையும் வழிபட வேண்டும். 

விநாயகரை வழிபடும் பொழுது, நமது விரல்களை மடக்கி, முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே கொட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் கொட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து தண்டுவடம் வழியாக மூலாதாரத்தில் ஒளி ரூபமாக இருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்கப்பெறும்.

l

முன்னொரு காலத்தில் விநாயகர், காக்கை உருவம் எடுத்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்தார். இதைக் கண்ட அகத்திய முனிவர் கோபம் கொண்டு காக்கை வடிவிலிருந்த விநாயகரை விரட்டினார். துரத்திக் கொண்டு ஓடும் பொழுது, காக்கை ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடிய பொழுதும், அகத்தியர் கோபம் தணியாமல்,  அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் கொட்டினார். தலையில் கொட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச்சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். 

விநாயகரை வணங்கிய அகத்திய முனிவர், தான் செய்த தவறை அப்பொழுதே உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே கொட்டி தோப்புக்கரணம் போட்டு தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராணங்கள் சொல்கின்றன.

இதன் பாவனையாகவே நாமும் தலையிலே கொட்டி, தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவு பெறும் என்பதனால்தான் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாட்டினை முதலில் துவங்கி விட்டு பின்னர் காரியங்களை நடத்த துவங்குகிறோம்.

Aarthi Sun, 06/16/2019 - 12:27
lord ganesha Spiritual விநாயகர் ஆன்மிகம்

English Title

tips to worship to lord ganesha

News Order

0

Ticker

0 
கடவுள்

தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா..  இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத...


சிலை

ஏன் கடவுளின் சிலையை கருங்கல்லில் வடிக்கிறார்கள்?

எல்லா கோயில்களிலும், உற்சவர் சிலையை உலோகத்தால் வடித்தாலும், மூலவர் சிலையைக் கருங்கல்லில் தான் வடித்திருப்பார்கள். உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. கரு...


கடவுள்

இந்தப் பெளர்ணமிக்கு மாங்கனித் திருவிழாவை மிஸ் பண்ணாதீங்க

மாங்கனித் திருவிழாவும் காரைக்கால் அம்மையாரும்  முன்னொரு காலத்தில், காரைக்காலில் ஓர் வீட்டில் மும்பொழுதும் சிவநாமம் கேட்டுக் கொண்டே இருக்கும். அது புனிதவதியின் வீடு. ஒரு நாள் ‘அம...


ஜேஷ்டாபிஷேகம்

பதவி, கெளரவம் தொடர்ந்து கிடைக்க ‘ஜேஷ்டாபிஷேகம்’!

தமிழ் மாதங்களில் நீண்ட நாட்களைக் கொண்ட மாதம் ஆனி மாதம் தான். பிற மாதங்களில் இல்லாதபடி, ஆனி மாதத்தில் 32 நாட்களைக் காணலாம். அதனால் தான் வடமொழியில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்று அழைக...


கடவுள்

திருமண வரம் தரும் ஆனித் திருமஞ்சனம்

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத தலங்களில் ஆகாய தலம் ஆக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில்  வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும...


சிவன்

இன்று, கடன்களை நீக்கி சுபிட்சம் தரும் சுக்கிரவாரப் பிரதோஷம்...

வெள்ளிக்கிழமையை சுக்ரவார் என்று சொல்வார்கள். சுக்கிரனுக்கு உகந்த நாள். சுக்கிர வாரம் என்று சொல்லப்படுகிற வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.  அதனால், இன்று...நிர்ஜலா ஏகாதசி

இன்று எம பயம் நீக்கும் நிர்ஜலா ஏகாதசி விரதம்

இன்று வருகின்ற ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்றழைக்கிறார்கள். வருடம் முழுவதும் வருகின்ற ஏகாதசிகளில் இதுவே உயர்ந்த ஏகாதசி. இன்றைய தினத்தின் மாலைப் பொழுது முழுவதும் யார்  தண்ணீரையும் அரு...


சாமிஆடுவது

கோயில் திருவிழாக்களில் சாமிஆடுவது, அருள்வருவது எல்லாம் உண்மையா?

ஆயிரக்கணக்கான வருடங்களாக, தொன்றுதொட்டு வருவது தான் திருவிழா சமயங்களில் கோயில்களில் சாமியாடுவதும், அருள் வந்து பேசுவதும். இதை எல்லாம் பொய் என்கிற ஒரு வார்த்தையால் ஒதுக்கி விடவும் மு...


கடவுள்

ஆலயங்களில் இறைவனை வழிபடும் முறைகள்.. இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா?

ஆன்மிகத்திற்கு பல்வேறு முகங்கள் உண்டு.ஒரே ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் இருப்பதைப் போல, இறைவனையும் பல்வேறு வகையில் வழிபடுகிறோம். அதில் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒன்று.

2018 TopTamilNews. All rights reserved.