• August
    22
    Thursday

Main Area

Mainஇந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

இப்போதுள்ள தலைமுறைகளில் பலருக்கு அகத்திகீரை என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.இன்னும் சிலர் மாட்டுக்கு தீவனமாக கொடுக்கப்படுகிற ஒரு வகை கீரை என்ற அளவில்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அகத்திகீரையை சாப்பிடலாம்னு தெரியும்,ஆனா கசக்குமே என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.அதெல்லாம் சாப்பிடலாம்,ஆனா அதைச் சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் அலர்ஜியாகி உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா வந்திரும்னு சொல்றதால சாப்பிடறதே இல்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்.

spinach

அகத்திக் கீரையை வழக்கம்போல் சமைத்து சாப்பிடலாம்.கொஞ்சம் கசப்பாக இருக்கும் என்பது உண்மைதான்.அந்தக் கசப்புதான் உங்கள் உடலிலுள்ள பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆறு மருந்து.சுவைக்காக சிலர் வெல்லம் சேர்த்து சமைப்பார்கள் அது கூடாது.கீரையின் இயற்கை தன்னை போகாமல் சமைக்க வேண்டும்.

அதே போல் பூவையும் பொரியல் செய்து சாப்பிடலாம்.அகத்தியில் வெள்ளை, சிகப்பு,சாழை என்று மூன்றுவகை உண்டு மூன்றையுமே உண்ணலாம், இவற்றில் சிகப்பு அகத்தியின் பூக்கள்தான் சுவையானது.சுவை மட்டுமல்ல அகத்திபூ மருத்துவ குணம் மிக்கது.

spinach

கால்சியம் மிகுந்திருப்பதால்  குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை கொடுத்து வந்தால் அவர்களின் பற்கள்,எலும்புகள் உறுதிப்படும்.புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் உடம்பில் சேரும் அசுத்தங்களைக் குறைக்கும். சளித்தொல்லை, பித்தம்,அல்சர் பொன்ற இரைப்பை நோய்கள் கட்டுப்படும்.இதயப் படப்டப்பு , பிரஷ்ஷர் மட்டுப்படும்.

சிவப்பு அகத்தி பூக்களை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு இரவில் ஒரு ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்டுவந்தால் மலச்சிக்கலே வராது.கண்பார்வை சிறக்கும் இத்தனை நற்பயண்கள் கொண்ட அகத்திப் பூக்களை எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம்.

spinach

அகத்தி பூ உருவத்தில் சற்று பெரியது,பூவின் நடுவில் வாளைப்பூவில் ‘கள்ளன்’ இருப்பது போல அகத்திப் பூவிலும் கெட்டியான நார் போன்ற ஒரு நரம்பு இருக்கும் அதை நீக்க வேண்டும்.பிறகு பூக்களை பொடிப் பொடியாக வெட்டி தண்ணீரில் அலசி சுத்தமாக நீரை வடித்து எடுங்கள்,இப்போது அகத்திப்பூ பொரியல் செய்ய நீங்கள் தயார்.

என்னென்ன தேவை


**பொடிப்பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம்,ஒரு கைப்பிடி அளவு


**காய்ந்த மிளகாய்கள் சில


**சீரகம் ஒரு ஸ்பூன்


**கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்


**கடுகு உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்


**கடலை எண்ணெய் ஒரு குழிக்கரண்டி


**தேங்காய் துருவல் உங்கள் மனம்போல


**உப்பு தேவைக்கேற்ப 


**கரிவேப்பிலை,அவளவுதான்.

ஒரு பொரிக்கும் சட்டியை அடுப்பிலேற்றி அது சூடானதும்எண்ணெய் விடுங்கள்,எண்ணெய்  சூடானதும் கடலைப் பருப்புகளைப் போட்டு கருகாமல் அடுப்பை சிம்மில் வைத்து லேசாக வறுத்து முடித்ததும்,கடுகு உளுந்து , கரிவேப்பிலை சேருங்கள்.கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப்போட்டு விட்டு,பொடியாக வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போடுங்கள்,இப்போது பொரியலுக்குத் தேவையான உப்பைச் சேர்த்து வதக்குங்கள்.

spinach

வெங்காயம் பாதி வெந்த பிறகு வெட்டி.வைத்து இருக்கும் அகத்திப் பூக்களை அள்ளிப்போட்டு வதக்குங்கள் பூவென்பதால், ஐந்தே நிமிடத்தில் வதங்கிவிடும். அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி விட்டு பரிமாறுங்கள்.

இனி எங்கேயாவது அகத்திப்பூக்கள் கண்ணில் பட்டால் விட்டு விடாதீர்கள். மாடுகளுக்கும் கொடுங்கள்,உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்தான்,நீங்களும் சாப்பிடுங்கள் ஆரோக்கியமும் முக்கியம் பாஸ்!

2018 TopTamilNews. All rights reserved.