• April
    05
    Sunday

Main Area

Main



குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்! கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

DGP
DGP

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை மாப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் 3வது நாளாக ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதேபோல் திருப்பூரிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என போராட்டம் நடைபெற்றுவருகிறது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு

தமிழகத்தில் CAA,NPR,NRC ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் தீவிரமடைவதால், போராட்டத்தை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகள் நியமித்து சட்ட ஒழுங்கை கண்காணிக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார். தமிழக சட்ட, ஒழுங்கு ஏ.டி.ஜி.பி மேற்கண்ட அதிகாரிகளை ஒருங்கிணைத்து செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்: 

மதுரை - அபய்குமார் சிங்
நெல்லை - மகேஷ்குமார் அகர்வால், முருகன்
தேனி - பாஸ்கரன்
தூத்துக்குடி - மகேந்திரன்
திண்டுக்கல் -ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., செயல்படுவார்.

 

2018 TopTamilNews. All rights reserved.