• August
    21
    Wednesday

Main Area

Main



இன்னும் 5 நாட்களில் துவங்கும் தென்மேற்கு பருவமழை

Southwest Monsoon
Southwest Monsoon
Loading...

ஜூன் முதல் மூன்று நாட்களில் கேரளாவில் துவங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை, இந்த வருடம் ஓரிரு நாட்கள் தாமதத்திற்குப் பிறகு ஆறாம் தேதி தன் பணியைத் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  கேரளத்தில் ஆறாம் தேதி கரையைத் தொடும் தென்மேற்கு பருவமழை, படிப்படியாக உள்நுழைந்து, இரண்டு வாரத்தில் ஒடிசாவின் கரையோரம் செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southwest Monsson

தற்போதைய நிலவரப்படி, தென்மேற்கு பருவம் வேகமெடுத்து அடுத்த இரண்டு நாட்களில் வட அந்தமான கடல் பகுதிகளை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர அளவைவிட சற்றே குறைவாக, அதாவது 94% வடமேற்கு இந்தியாவிலும், 100% மத்திய இந்தியாவிலும், 97% அளவுக்கு தென்னிந்திய பகுதிகளிலும், 91% வடகிழக்கிலும் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.