• August
    21
    Wednesday

Main Area

Main



'போராடுவோம், போராடுவோம்!...நாய் இறைச்சி சாப்பிட்டுப் போராடுவோம்..!

protest
protest
Loading...

விலங்குநல உரிமை ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்த்து தென்கொரிய விவசாயிகள் சிலர் நாய் இறைச்சி சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உலகின் பல்வேறு இடங்களில் நாய் மற்றும் பூனைகளை இறைச்சிக்காக கொள்கின்றனர். பல மக்கள் அவற்றை விரும்பியும் சாப்பிடுகின்றனர். சீனாவில் வருடந்தோறும் நடைபெறும்  நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் நாய்  இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவில் நாய் இறைச்சி உட்கொள்வதை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிரே நின்று நாய் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டே தென்கொரிய விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தென்கொரியாவில் ஆண்டுக்குச் சுமார் 10 கோடி நாய்கள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன. நாய்களைச் செல்லப்பிராணிகளாக மக்கள் வளர்க்கத் தொடங்கியுள்ளதால் நாய் இறைச்சி மீதான ஈர்ப்பு கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துவருகிறது என விலங்கின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

அதிக வெப்பமான கோடைகாலத்தில் நாய் இறைச்சி சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்றும் சிலர் கூறுகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.