• February
    17
    Monday

Main Area

Main



கண் மருந்தை வைத்து கணவனை கொன்ற மனைவி...அதிர்ச்சியில் உறைய வைக்கும் வாக்குமூலம்!

 லானா சூ கிளேட்டன்
லானா சூ கிளேட்டன்

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 53 வயது லானா சூ கிளேட்டன் பெண் தனது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்த குற்றத்திற்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் லானா தனது கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார். லானா சூ கிளேட்டன் செவிலியர். இவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டன் செல்வம் படைத்தவர்  என்று கூறப்படுகிறது.  

ttn

இதுகுறித்து அவர் அளித்த  வாக்குமூலம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.  என்  கணவர் 
என்னை கொடுமைப்படுத்திவந்தார்.  ஒருகட்டத்தில் தொல்லை பொறுக்க முடியாமல் அவரை கொல்ல  திட்டமிட்டேன்.

ttn

அதன்படி திரைப்படங்களை பார்த்து  ‘விசின்’ எனும் கண் சொட்டு மருந்தை  2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மூன்று நாட்களுக்கு அவர் குடிக்கும் நீரில் கலந்தேன். அப்படி  கொடுக்கும் போது  உடல் உபாதைகள் ஏற்படும் என்று  நினைத்தேன்.ஆனால்  இறந்துவிடுவார் என்று தெரியாது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.  கொலை குற்றத்திற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ttn

முன்னதாக  கிளேட்டன் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மற்ற சொத்துகளை வைத்திருந்தார் என்று  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.