• August
    24
    Saturday

Main Area

soundarya Vishagan marriage
அவன் ரத்தத்திலேயே ஸ்டைல் இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்

சென்னை:  சவுந்தர்யா ரஜினிகாந்த்  மகன் வேத் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளது. 

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு,  பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

இந்நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேத் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் வேத் கால்மேல் கால் போட்டு  காரில் உட்கார்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், அவனுடைய ரத்தத்தில் ஸ்டைல் ரத்தம் உள்ளது என்று நினைக்கின்றேன், அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர். 

vishagan

முன்னதாக வேத்திடம் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த், இது தான் ஆசிர்வாதம்' எனக் குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சென்னைக்காக உணர்ச்சிவசப்படும் தோனிக்கு ஐபில் போட்டியில் தடை விதிக்க வேண்டும்: சேவாக் 

manikkodimohan Sun, 04/14/2019 - 13:37
soundarya rajnikanth rajinikanth soundarya Vishagan marriage ved soundarya சவுந்தர்யா ரஜினிகாந்த்  மகன் வேத் சினிமா

English Title

rajini style in his grand daughter blood

News Order

0

Ticker

0 சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமண வரவேற்பு: அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அசத்தல் வருகை!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள்  சௌந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பில்  பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகின்றது.

soundarya

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது.  

soundarya

இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல் ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், நக்கீரன் கோபால்  உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் திருமணத்துக்கு வருகை தந்தனர்.

ambani

இந்நிலையில் திருமணத்தை அடுத்து நடைபெற்ற  வரவேற்பு நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி  மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோர் வருகை புரிந்தனர்.

ambani

இதை தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், நடிகை கஜோல் ஆகியோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

manikkodimohan Tue, 02/12/2019 - 14:07
rajinikanth soundarya Vishagan marriage soundarya marriage SOUNDARYA RAJINIKANTH kollywood soundarya சினிமா

English Title

soundarya rajinikanth reception Bollywood celebrities participate photos

News Order

0 சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம்: பிரபலங்கள் பங்கேற்பு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளையமகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. 

vishagan

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதையடுத்து இவர்களது திருமணம் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.  

 

இந்த திருமணத்தில், மு.க.அழகிரி, நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், நக்கீரன் கோபால்  உள்ளிட்டவர்கள் திருமணத்துக்கு வருகை தந்தனர். முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் திருமணத்துக்கு வருகை தந்தனர்.

edappadipalanisamy

சௌந்தர்யா பிங்க் கலர் புடவையிலும், விசாகன் பட்டு வேட்டியிலும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.  முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

manikkodimohan Mon, 02/11/2019 - 09:34
rajinikanth soundarya rajinikanth marriage soundarya marriage soundarya Vishagan marriage rajini சினிமா

English Title

soundarya rajinikanth Vishagan marriage today

News Order

0
2018 TopTamilNews. All rights reserved.