• October
    24
    Thursday

Main Area

Main



தோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..!

வினேஷ் போகட்
வினேஷ் போகட்

உலக மல்யுத்த போட்டியில் தோல்வியுற்ற வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என சூளுரைத்துள்ளார்.

vinesh

கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று முடிந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் பங்கு பெற்றார். இதில் முதல் சுற்றில் 13-0 என அபாரமாக வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

காலிறுதியில் 55 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பெற்ற ஜப்பான் வீராங்கனையான மயூ முகைடாவை எதிர்கொண்ட வினேஷ் போகட், துவக்கம் முதலே சரிவைக் கண்டு இறுதியில் 0-7 என படுதோல்வியை அடைந்தார். 

காமல்வேல்த் போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உலக மல்யுத்த போட்டியிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். 

vinesh

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய வினேஷ் போகட் கூறுகையில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியுற்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டிக்கான முதல் தகுதிச்சுற்றில் வென்றது ஆறுதல் அளிக்கிறது. நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என சூளுரைத்தார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை பல புதிய யுக்திகளைக் கையாண்டார். இதை தடுத்து ஆடுவதற்காக போராடிய நான் அதிகளவிலான சக்தியை பயன்படுத்தி விரைவில் சோர்வடைந்து விட்டேன். இதுவே எனது தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது என உணர்ந்து கொண்டேன்.

பயிற்சியாளரிடம் உரிய  ஆலோசனை பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் கலந்து கொள்வேன் என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.