• February
    25
    Tuesday

Main Area

Main



மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவ சேனாவுக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை! போட்டு உடைத்த காங்கிரஸ் அமைச்சர்....

சோனியா காந்தி
சோனியா காந்தி

மகாராஷ்டிராவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், முதல்வர் பதவியை சமகாலம் விட்டு கொடுக்க வேண்டும் என சிவ சேனா கூறியது. ஆனால் பா.ஜ.க. அதற்கு மறுத்து விட்டது. இதனையடுத்து பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்து கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் சிவ சேனா ஆட்சியை அமைத்தது.

அசோக் சவான்

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டுமானால், அரசியலமைப்பு எல்லைக்குள் அரசாங்கம் செயல்படும் என சிவ சேனா எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என சோனியா காந்தி நிபந்தனை விதித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவான் இது குறித்து கூறியதாவது: முதலில் அரசியலமைப்பின் எல்லைக்குள் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும், அரசியலமைப்பு மன்னுரையை மீறக் கூடாது என்றும் சிவ சேனாவிடம் எழுத்துப்பூர்வமாக வாங்க வேண்டும் என எங்களிடம் சோனியா காந்தி கூறினார்.

உத்தவ் தாக்கரே

மேலும் இந்த தகவலை உத்தவ் தாக்கரேவிடம் தெரிவிக்கும்படி எங்களுக்கு கூறப்பட்டது. அரசாங்கம் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லையென்றால் கூட்டணியிலிருந்து கட்சி விலகி விடும் என மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் சோனியா தெரிவித்தார். இதையும் நாங்கள் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தோம். அதற்கு உத்தவ் தாக்கரே சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து நாங்கள் ஆட்சி அமைத்தோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.