kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ராகுல் காந்தியை தோற்கடித்த... ஸ்மிர்தி இராணியின் உதவியாளர் சுட்டுக்கொலை!

smirti irani
smirti irani
Loading...

மோடியின் நம்பிக்கைக்குரிய மத்திய அமைச்சர்களில் மிக முக்கியமானவர் ஸ்மிர்தி இராணி.தனது படிப்புச்சான்றிதழ் முதல் எல்லாவற்றிலும் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்த ஸ்மிர்தி,ராகுலிடம் இருந்து பறித்த அமெதி தொகுதி வெற்றியை அவர் முழுமையாக ருசிக்க முடியாமல் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது!

அவரது தனி உதவியாளரும் அமெதி மாவட்டம் பரூலியா கிராமத்தலைவருமான சுரேந்தர் சிங்,படுகொலையால் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார்.சுரேந்தர் சிங்குக்கு (50)தொழில் செருப்பு வியாபாரம். இன்று காலை 11.30 மணியளவில் அவர் தன் வீட்ட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்போது இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

narendra singh

இந்த பரூலியா கிராமம் கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது செய்திகளில் அடிபட்ட ஊர்தான்.ஸ்மிர்தி இராணி ராகுலை அவமானப்படுத்த ஷூக்களை வினியோகம் செய்வதாக பிரியங்கா குற்றம் சாட்டி இருந்தார்.இப்போது சுரேந்தர் சிங்கை சுட்டவர்கள் தப்பிவிட்டாலும் ,சந்தேகத்தின் பெயரில் இரண்டு பேரைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

“இறந்துபோன சுரேந்தர் சிங் கிராமத்தலைவராக இருப்பதால் அவருக்கு உள்ளூரில் முன் விரோதத்தால் இது நடந்திருக்கலாம், ஆனாலும்,இதில் அரசியல் எதிரிகளுக்கும் சம்பந்தம் இருக்கலாம்.நாங்கள், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை கைது செய்திருக்கிறோம்.விசாரணை மிகவும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் இப்போதைக்கு எங்களால் எதுவும் சொல்ல முடியாது” என்கிறார், அமெதி மாவட்டக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார்.

இதற்கிடையில், இன்று நடந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்காக டெல்லி போயிருந்த ஸ்மிர்தி இராணி தனக்கு நெருக்கமான உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கொல்லப்பட்ட சுரேந்தர் சிங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல,அமெதிக்கு விரைந்தார் ஸ்மிர்தி இராணி.

 

2018 TopTamilNews. All rights reserved.